விஜய் பசி, வறுமையில் வளர்ந்தாரா ? - பள்ளி நண்பர் வெளியிட்ட ஷாக் பதிவு - என்ன தெரியுமா?
தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். சினிமாவை தாண்டி விஜய் அரசியலில் இறங்கி இருக்கிறார். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று கட்சியின் பெயரை அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து இவர் அரசியல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். விஜய் இந்த தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். மேலும், விஜய் அவர்கள் ஒரு மாவட்டத்திற்கும் சென்று பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார். இதை அடுத்து தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவிற்கு 85 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்ததாக அறிவித்திருந்தார்கள்.
பின் தேர்தலின் முடிவுகள் வெளியானது. 75 வருட திமுக, 50 வருட அதிமுக என எல்லா கட்சியையும் தவெக கட்சி கதி கலங்க வைத்தது. தமிழகத்தில் 108 இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் தவெக கட்சி இருக்கிறது. இது மிகப்பெரிய வரலாற்று சாதனையாகவே பார்க்கப்படுகிறது. கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டில் ஒரு தனி மனிதன் தேர்தலில் வெற்றி பெறுவது மிகப்பெரிய விஷயம் என்று எல்லோருமே பாராட்டி வருகிறார்கள். இதை அடுத்து பிரபலங்கள், நடிகர்கள், ரசிகர்கள், அதிகாரிகள் என பலருமே விஜய்க்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
விஜய் அரசியல்:
இதை அடுத்து பெரும்பான்மை ஆக 118 சீட்டுகள் இருந்தால் மட்டும்தான் முதலமைச்சராக முடியும் என்று ஆளுநர் கூறியிருந்தார். இதை அடுத்து விஜய் அவர்கள் வெற்றி பெற்ற மற்ற கட்சிகளிடம் கூட்டணிக்கு கேட்டிருந்தார். தற்போது பெரும்பான்மையாக 120 எம் எல் ஏக்கள் உயர்ந்துள்ளது. பின் நேற்று 10 மணியளவில் தளபதி விஜய் அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்றார். ஆளுநர் அவர்கள் தான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்ற உடனே விஜய் அவர்கள் மூன்று கோப்புகளில் கையெழுத்தும் போட்டு இருக்கிறார்.
விஜய் உரையாடல்:
அது மட்டும் இல்லாமல் விஜய் அவர்கள் மேடையில், சினிமாவில் நான் எப்படியாவது கஷ்டப்பட்டு வெற்றியடைய வேண்டும் என்று போராடியவன் தான் இந்த சாதாரண உதவி இயக்குனர் உடைய மகன். வறுமை என்றால் என்ன? என்பது எனக்கு தெரியும். பசியும் எனக்கு நன்றாகவே புரியும். நான் மன்னர் பரம்பரையிலிருந்து வந்திடவில்லை என்றெல்லாம் பேசி இருந்தார். இப்படி விஜய் பேசி இருந்தது மிகப்பெரிய அளவில் இணையத்தில் வைரலாகி இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் விஜய்யின் நண்பர் ஒருவர் சோசியல் மீடியாவில், விஜய் தமிழக முதல்வராக பதவியேற்ற போது பேசிய உரையில் தான் வறுமையில் வளர்ந்ததாகவும் பசி என்றால் தனக்கு தெரியும் என்றும் சொன்னார்.
விஜய் நண்பர் பதிவு:
இது முழுக்க முழுக்க பொய். காரணம், நான் அவருடன் லயோலா பள்ளியில் மூன்றாம் வகுப்பில் ஒன்றாக படித்தேன். வகுப்பு தோழனாக இருந்தேன். விஜயினுடைய தந்தை திரைப்பட இயக்குனர். அவர் தன் மகனுக்கு திரைப்படத்துறையில் ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்து கொடுத்தார். பெரும்பாலான திரைப்பட இயக்குனர்களை போலவே அவருடைய தந்தையும் பொருளாதார நெருக்கடி காலங்களை எல்லாம் சந்தித்திருக்கலாம். அதற்கு வறுமை சமமானது கிடையாது. வசதியான குடும்பத்தை சேர்ந்த பல இளைஞர்கள் பணமில்லாமல் இருப்பதையும், வறுமையும் குழப்பிக் கொள்கிறார்கள். இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை என்று கூறியிருக்கிறார்.