விக்ரமின் கோப்ரா படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விக்ரம். இவர் சினிமாவில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் திரை உலகில் நுழைந்து தன்னுடைய கடும் உழைப்பினால் தனெக்கென ஒரு முத்திரையை பதித்து இருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் நடித்து இருக்கிறார்.

இவருடைய நடிப்பிற்கு தேசிய விருது, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது, பிலிம்பேர் விருது எனப் பல்வேறு விருதுகளை வாங்கி இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் சிவாஜி, கமலுக்கு பின்னர் நடிப்பிற்கு ஒரு உதாரணமாக இருப்பவர் என்றால் அது விக்ரம் என்றே சொல்லலாம். சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த மகான் என்ற படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பொன்னியின் செல்வன்.

Advertisement

விக்ரம் நடித்த படங்கள்:

இந்த படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அடுத்து செப்டம்பர் மாதத்தில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறார். இந்த படம் கோலார் தங்க சுரங்கத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் கதை என்று கூறப்படுகிறது.

கோப்ரா படம்:

இந்த படத்தை ஸ்டுடியோ ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இது விக்ரமின் 61 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது விக்ரம் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கோப்ரா. இயக்குனர் அஜய் ஞானமுத்து இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ இந்த படத்தை தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் விக்ரமுடன் ஸ்ரீநிதி செட்டி, இர்பான் பதான், ஆனந்தராஜ், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி உட்பட பல நட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

Advertisement

படத்தின் கதை:

படத்தின் ஆரம்பத்தில் ஸ்காட்லாந்து நாட்டு இளவரசரை கொள்ள ஆப்பிரிக்க பாதிரியார் தோற்றத்தில் கதாநாயகன் விக்ரம் வருகிறார். இதை விசாரிக்க போலீஸ் அதிகாரியாக இர்பான் பதான் வருகிறார். அந்த இளவரசர் கொலை மாதிரியே இந்தியாவில் ஒரிசா முதல்வர் ஒருவர் கொல்லப்படுகிறார். மேலும், இரண்டிலுமே ஒற்றுமை இருக்கிறது என்ற கல்லூரி மாணவி மீனாட்சி கோவிந்தராஜன் ஒரு ஆராய்ச்சி செய்கிறார். அதற்குப் பிறகு அடுத்தடுத்து நடக்கும் சில கொலை சம்பவங்களை விக்ரம் செய்கிறார்.

Advertisement

கோப்ரா படத்தின் வசூல்:

இதன் பின்ணணி என்ன? சர்வதேச கொலையாளிகளை இர்பான் கண்டுபிடிக்கிறாரா? விக்ரம் அவரிடம் இருந்து தப்பித்தாரா? விக்ரம் இந்த கொலை செய்வதற்கான காரணங்கள் என்ன என்பது தான் படத்தின் மீதி கதை. பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த கோப்ரா படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது. இந்நிலையில் கோப்ரா படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கோப்ரா படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 12 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. இனிவரும் நாட்களில் வரும் விமர்சனங்களை தாண்டி படம் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement