புத்தக விமர்சகரான ஆர் ஜே ஆனந்தி பெண்கள் மூடி மூடி வைத்தால் தான் அதை திறந்து பார்க்க வேண்டும் என்று தோன்றும் என கூறியுள்ளது தற்போது சர்ச்சைக்குளாகி இருக்கிறது. தமிழில் சினிமாவில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில், இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்றது. காஜல் அகர்வால், சம்யுக்தா கே எஸ் ரவிகுமார் போன்ற பலர் நடித்த இந்த படத்தின் யோகி பாபுவின் மனைவியாகவும் ஜெயம் ரவியின் தங்கையாகவும் நடித்தவர் பிரபல ஆர் ஜேவான ஆனந்தி.

விஜே ஆனந்தி :

மேலும் இவர் சூரியன் மற்றும் பிக் என்ற வானொலியில் தன்னுடய பயணத்தை தொடங்கினார். பின்னர் சில தொல்லைக்காட்சிகளில் தொகுப்பாளராக இருந்து வி ஜே வாக மாறினார். கோமாளி படத்திற்கு பின்னர் பிகில், சூரரரை போற்று உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவர் ஒரு தீவிர புத்தகப் பிரியர். மேலும் , இவர் “The Book Show” . என்ற யூடுயூப் சேனலையும் நடத்தி வருகிறார். இந்த சேனலை 2.5லட்சம் பேர் பின்தொடர்ந்து இருக்கின்றனர்.

Advertisement

பெண்களுக்கு சம உரிமை :

இந்த சேனலில் இவர் பல விதமான படைப்பாளிகளின் புத்தகங்களை குறித்து வீடியோ பதிவிட்டு அவற்றை விமர்சித்தும். புத்தகங்களினால் ஏற்படும் நன்மை குறித்தும் பேசி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் பிரபல செய்தி ஊடகத்திற்கு பேட்டி கொடுத்திருந்த ஆனந்தி கூறியதாவது `பெண்ணினவாதிகள் பெண்களின் சம உரிமையை பற்றி பேசுகின்றனர். ஆனால் நான் அவற்றை பற்றி பேசுவதில்லை புத்தகங்களை மட்டுமே விமர்சனம் செய்து வருகிறேன்.

ஆணுக்கு எதிராக இல்லை :

ஆனால் எனக்கும் பெண்ணின எண்ணங்கள் இருக்கின்றது. நான் ஆணுக்கு எதிரானது பெண்ணினம் என்பதை சொல்லவில்லை. சினிமாவில் வரும் கொச்சை வார்த்தைகள் பெண்களை தாக்கும் வகையில் இருக்கின்றது. அப்படி இருக்க ஏன் அதனை சினிமாவில் பயன்படுத்த வேண்டும். அது போன்றவற்றை பயன்படுத்தாமல் இருக்கலாம். நான் சந்தித்த 100ற்றில் 90 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளகி உள்ளனர்.

Advertisement

சர்ச்சையான பேச்சு :

தொடக்கத்தில் இருந்தே பெண்கள் ஷால் போடா வேண்டும், பின் குத்திக்கொள்ள வேண்டும், தங்களுடைய மார்பகங்களை மறைத்துக்கொள்ள வேண்டும் என்று பயமுறித்தி வைத்திருக்கின்றனர். ஒரு ஆணுக்கு பெண்ணை பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போது தான் மற்ற பெண்களுடன் சகஜமாக பழக முடியும். ஆனால் மூடி மூடி வைக்கும் போது அதனை திறந்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வரும் என்று கூறியுள்ளார் புத்தக விமர்சகர் Rj ஆனந்தி. இவர் இப்படி கூறியது பெரும் சர்ச்சை யாக வெடித்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement
Advertisement