டி ராஜேந்தர் பாடுறத பாத்து சிரிக்க கூடாது, சிரிச்சா திட்டுவாரு- பாவா லக்ஷ்மணன் சொன்ன தகவல்
நடிகர் டி ராஜேந்தர் குறித்து பாவா லட்சுமணன் அளித்து இருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகராக வலம் வருபவர் பாவா லட்சுமணன். இவர் பெரும்பாலும் வடிவேலு காம்பினேஷனில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் தமிழ் சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
https://youtube.com/shorts/p1TWOJ12oBU?si=ze4N2zydcgugpujt
இருந்தாலும், சில ஆண்டுகளாகவே இவர் படங்களில் பெரிதாக நடிப்பதில்லை. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் பாவா லட்சுமணன், டி ராஜேந்தர் பாட்டு ரெக்கார்டிங்கில் இருக்கும்போது யாருமே சிரிக்க கூடாது. சிரித்தால் அவர் பயங்கரமாக திட்டி விடுவார். ஒருமுறை நான், டி ராஜேந்திரன் ரெக்கார்டிங்கு சென்றிருந்தேன். அவர் பயங்கரமாக பாடிக் கொண்டிருந்தார். அது கேட்டவுடன் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. பின் சிரித்து விட்டேன்.
டி ராஜேந்திரன் குறித்து சொன்னது:
உடனே அவர், யாருடா அது சிரித்தது என்று கேட்டார். நான் ஓடிப்போய் மறைந்து கொண்டேன். இருந்தாலும் அவருடைய ஒவ்வொரு பாடலுமே சூப்பராக இருக்கும் என்று கூறியிருக்கிறார். கடந்த ஆண்டு பாவா லட்சுமணன் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தார். மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் இவர் பொருளாதார நெருக்கடியினால் தவித்து கொண்டு இருந்தார். அதன் பின் சக நடிகர்களின் உதவியினால் இவர் நீரிழிவு நோய்க்காக சிகிச்சை பெற்று இருந்தார்.
பாவா லக்ஷ்மணன் அளித்த பேட்டி:
இது தொடர்பாக இவர் ஒரு பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில் அவர், சில வருடங்களாகவே எனக்கு சுகர் பிரச்சனை இருந்தது. சுகர் கண்ட்ரோல் மீறிப் போனதால் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து இருந்தேன். மருத்துவர்கள் டெஸ்ட் எல்லாம் எடுத்து பார்த்து பாதிப்பு அதிகமாகிவிட்டது என்று கட்டைவிரலை எடுத்து ஆகணும் என்று சொல்லிவிட்டார்கள். ஆப்ரேஷன் எல்லாம் பண்ணி விரலை எடுத்து விட்டோம்.
சிகிச்சை குறித்து சொன்னது:
அந்த காயம் சரியாகுவதற்கு நான்கு ஐந்து மாதம் ஆகும் என்று சொன்னார்கள். ஏற்கனவே வாழ்வாதாரத்துக்கு வழியில்லாமல் நண்பர்கள் உதவியால் தான் நாட்களை தள்ளிக் கொண்டிருக்கிறேன். பல மாதமாக பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இப்போது கட்ட விரலையும் எடுத்து விட்டார்கள். இந்த வலியை விட வாய்ப்பு கிடைக்காது தான் பெரிய வலியாக இருக்கிறது. காயம் எல்லாம் சரியான பிறகுதான் வாய்ப்பு தேட முடியும். அதுவும் கிடைக்குமா என்று தெரியவில்லை.
டி.ராஜேந்திரன் குறித்த தகவல்:
உதவுவதற்கு என்னை பெத்தவங்களும் உயிரோடு இல்லை என்று கூறி இருந்தார். அதற்கு பின் சில பிரபலங்கள் உதவி இருந்தார்கள். தற்போது பாவா லக்ஷ்மணன் நலமாக இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனர், நடிகர்,கதையாசிரியர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டு திகழ்ந்தவர் டி. ராஜேந்திரன். இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார். இவருடைய படைப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. சமீப காலமாக இவர் சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி இருக்கிறார்.