அப்பாவானார் காமெடி நடிகர் சதிஷ் - என்ன குழந்தை தெரியுமா ? குவியும் வாழ்த்துக்கள்.
பிரபல காமெடி நடிகரான சதீஷ் அப்பாவாகியுள்ளதை தனது சமுக வலைதளத்தில் மகிழ்ச்சியாக அறிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் வடிவேலு மற்றும் விவேக்கின் காமெடிகள் ஓய்ந்த நிலையில் பல்வேறு காமெடி நடிகர் சதீஷ் 8 வருடங்களாக கிரேசி மோகனிடம் உதிவியாளராக பணியாற்றியவர்.இவர் முதன்முதலில் ஏ. எல் விஜய் இயக்கிய பொய் சொல்ல போறோம் என்ற காமெடி படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றினார். அதன் பின்னர் மதராஸபட்டினம், எதிர் நீச்சல், மான் கராத்தே போன்ற படங்களில் காமெடியனாக நடித்தார்.
மேலும், இவர் கிரேஸி மோகன் குழுவிலும் பணியாற்றியுள்ளார். சதிஷ் 2003 இல் வெளியான விடாது சிரிப்பு என்ற சீரியல் ஒன்றிலும் நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்த காமெடி தொடர் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி யுள்ளது. ஆனால் சில பல காரணங்களால் இந்த தொடர் 25 எபிஸோடகள் மட்டுமே ஒளிபரப்பாகியுள்ளது.தற்போது யோகி பாபு மற்றும் சூரிக்கு இடையே பட வாய்ப்புகளை பிடிக்க போட்டி நடந்து வந்தாலும் சூரியை விட சதீஷ் அதிகபடியான பட வாய்ப்புகளை பிடித்து விடுகிறார்.
எப்போதும் களகளவேனு இருக்கும் சதீஷுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்து முடிந்ததாக ஒரு செய்தி பரவியது. அதே போல இவர் கீர்த்தி சுரேஷுடன் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளத்தில் வெளியானது. அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், சதீஷுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
https://twitter.com/kayaldevaraj/status/1323888697264107522
நடிகர் சதீஷின் திருமணம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. இப்படி ஒரு நிலையில் நடிகர் சதிஷ் மனைவி சிந்துவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் சதிஷ். சதிஷ் அப்பாவானதை அடுத்தது பல்வேறு பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.