ஜல்லிக்கட்டில் கருப்பன் வென்ற பரிசுகளை எல்லாம் இதைத்தான் செய்வோம் - சூரி சொன்ன சூப்பர் தகவல்.

By Rajkumar · 7/7/2020

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் சூரி. இவர் விவேக், சந்தானத்திற்கு பிறகு காமெடியில் முன்னணி நடிகராகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார். சீரியல் நடிகராக தான் இவர் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். பின் இவர் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த நினைவிருக்கும் வரை என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். ஆரம்பத்தில் இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தார். ஆனால், இவர் மக்கள் மத்தியில் பிரபலமானது 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணில கபடி குழு படத்தின் மூலம் தான்.

அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சூரி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, ஊரடங்குக்கு நடுவில் ஊரே அடங்கி இருக்கும் நிலையில் என் கருப்பன் நடந்து போனான் என்று பதிவிட்டுள்ளார்.

சூரி அவர்கள் தன்னுடைய கருப்பன் என்கிற காளையை பிடித்துக்கொண்டு ஊரடங்கு வேளையில் சாலையில் நடந்து வந்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், இவரது காளை ஜல்லிக்கட்டில் கூட பங்குபெற்றுள்ளது. தனது கருப்பன் குறித்து பேசியுள்ள சூரி, கருப்பன் இதுவரைக்கும் 40க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறான்.

https://twitter.com/sooriofficial/status/1280090535932264448

இதுவரை நடந்த ஜல்லிக்கட்டில் ஒரு முறை கூட கருப்பனை யாரும் பிடித்தது இல்லை ஏன் தொட்டது கூட கிடையாது கருப்பன் பங்கேற்ற அனைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளில் பரிசுகளை வென்றுள்ளார். கருப்பன் வென்ற பரிசுகளை எல்லாம் அவரை பராமரிப்பு அவர்களுக்கும் ஊர் மக்கள் வீட்டில் ஏதேனும் காதுகுத்து திருமண விழா என்று விசேஷங்கள் நடக்கையில் கருப்பன் சார்பாக அளித்து விடுவோம். தற்போது எங்கள் கருப்பனை எனது தம்பி வினோத் தான் பராமரித்து வருகிறார் என்று கூறியுள்ளார்

behindtalkies AMP · Quick view
View full