புதிய BMW கார், ஏழை குழந்தைகளை ஏற்றி புதிய துணி, உணவுகளை அளித்து மகிழ்ந்த தங்கதுரை
பழைய ஜோக்கு தங்கதுரை புதிய சொகுசு கார் வாங்கி இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சினிமா நடிகர்களை தொடர்ந்து விஜய் டிவி பிரபலங்களும் சொகுசு காரர்களை வாங்கி வருகின்றனர். ஏற்கனவே தொகுப்பாளினி மணிமேகலை மற்றும் உசேன் இதுபோல் சொகுசு கார் வாங்கி வீடியோ வெளியிட்டது நாம் அறிந்ததே. தற்போது அந்த வரிசையில் பழைய ஜோக் தங்கதுரை இணைந்துள்ளார்.
நீல நிறத்தில் காஸ்ட்லியான BMW வாங்கியிருக்கும் தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நீண்ட பயணம் மற்றும் நிறைய போராட்டங்களுக்குப் பிறகு எனக்கு நானே இந்த காரை பரிசளித்துக் கொண்டேன். மேலும் இந்த சந்தோஷத்தை நான் தேவைப்படும் குழந்தைகளிடம் பகிர்ந்து கொண்டேன். அவர்களின் சந்தோஷமும் அன்பும் விலை மதிக்க முடியாதது. மேலும், உங்களின் அன்பிற்கும் சப்போர்ட்டிற்கும் நன்றி மக்களே என்று பதிவிட்டுள்ளார்.
தங்கதுரையின் செயல்:
காஸ்ட்லி கார் வாங்கியவுடன் பந்தாவாக குடும்பத்தினரையும் நண்பர்களையும் முதன் முதலில் காரில் ஏற்றிக்கொண்டு சுற்றாமல், இல்லாத குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது காரில் அவர்களுடன் ஒரு ரவுண்டு அடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அவர்களுக்கு தேவைப்படும் புத்தகங்கள் மற்றும் துணிமணிகளை பரிசாக அளித்துள்ளார். பின் அவர்களை ஓட்டலுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு உணவு வாங்கி கொடுத்து சந்தோஷப்படுத்தி இருக்கார். இப்போது இந்த வீடியோவை தங்கதுரை வெளியீட்ட நிலையில் அவரது நல்ல மனதை பலரும் பாராட்டி கமெண்ட் போட்டு வருகின்றனர்.
தங்கதுரை குறித்து:
இவரின் சொந்த ஊர் சென்னை தான். இவர் கல்லூரியில் படிக்கும் போதே மிமிக்ரி, ஸ்டாண்ட் அப் காமெடி, கானா பாடல் என பல திறமைகளைக் கொண்டிருந்தவர். இவர் பயோ டெக்னாலஜி படித்திருந்தாலும் கலைத் துறையின் மீது அதிக ஆர்வம் உடையவர். இவரின் வீடு புளியந்தோப்பு பக்கத்தில் இருப்பதால், இவரது நண்பர்கள் இவரை 'டைகர் கார்டன் தங்கதுரை' என்று வேடிக்கையாக அழைப்பார்களாம். பின் காமெடி நிகழ்ச்சிக்காக நடந்த ஆடிஷனில் தன் நண்பர்களின் உதவியால் பங்கேற்று போட்டியாளராகவும் தேர்வானார்.
கலக்கப்போவது யாரு:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக மக்களிடையே அதிக வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி தான் 'கலக்கப்போவது யாரு'. இந்த நிகழ்ச்சியில் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களிடையே பெரிய அளவில் பிரபலமானவர் தான் 'பழைய ஜோக் தங்கதுரை'. ஏனென்றால் இவர் சொல்ற ஜோக்குகள் எல்லாமே பழசாகவும், போர் அடிக்கிற மாதிரியும் இருக்கும். அதிலும் அவர் சொன்னார், 'புளிய மரத்து அடியில, புஷ்பலதா மடியிலே' ஜோக் ரசிகர்கள் மத்தியில் பயங்கர ட்ரெண்டிங் ஆனது.
தங்கதுரை திரைப்பயணம்:
மேலும், தமிழில் ஒரு சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தங்கதுரை நடித்துள்ளார். இவர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே நடிக்கக்கூடியவர். இவர் எங்கேயும் எப்போதும், மாநகரம், இன்று நேற்று நாளை, அட்டக்கத்தி தினேஷின் அண்ணனுக்கு ஜே போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் காமெடி நிகழ்ச்சிகளில் எல்லாம் தங்கதுரை கலக்கி வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் விஜய் டிவியில் பரப்பாகும் 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை' நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.