எலி, கரப்பான் பூச்சி நடமாடும் இடம், தரமற்ற உணவுகள்- சூரியின் அம்மன் உணவகம் மீது எழுந்த புகார்
நடிகர் சூரியின் அம்மன் உணவகத்துக்கு சீல் வைக்க வேண்டும் என்று ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கும் சம்பவம் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. காமெடி நடிகர் சூரி சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தற்போது விவேக், சந்தானம் அளவிற்கு காமெடியில் சிறந்து விளங்கி வருகிறார். காமெடியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ள சூரி தற்போது ஹீரோவாக கலக்கி கொண்டு வருகிறார்.
மேலும், இவர் நடிகர் என்பதை தாண்டி தொழில் அதிபரும் ஆவார். இவர் சொந்தமாக ஹோட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு மதுரையில் அம்மன் உணவகம் என்ற பெயரில் பல கிளைகள் இருக்கிறது. அதில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அம்மன் உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தை சீல் வைக்க வேண்டும் என்று ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கும் சம்பவம் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது,
சூரி அம்மன் உணவகம்:
மதுரையில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சூரியின் அம்மன் உணவகம் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகம் மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் விடுதிக்கான கழிவுநீர் தொட்டி அமைந்துள்ள பகுதியில் தான் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அந்த கழிவுநீர் தொட்டி பக்கத்தில் தான் சமைக்க தேவையான காய்கறிகளை வெட்டுவது, உணவு பொருள்களை தயாரிப்பது, பாக்கெட் போடுதல் போன்ற பல வேலைகளை செய்கிறார்கள்.
சூரி உணவகம் மீதுபுகார் :
இதனால் வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் ஆட்சியில் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்க கூட்டத்தில் இது தொடர்பாக புகார் அளித்திருந்தார். அந்த புகாரியில் அவர், எலி, கரப்பான் பூச்சி போன்றவை நடமாடும் இடத்தில் தரமற்ற முறையில் உணவுகளை தயாரித்து கொடுக்கிறார்கள். இதனால் நிறைய நோய்கள் உருவாக வாய்ப்பு இருக்கிறது. அதோடு பொதுப்பணி துறையின் சட்ட திட்டங்களுக்கு புறம்பாக இடத்தை ஆக்கிரமித்து தரமற்ற உணவுகளை தயாரித்து இருக்கிறார்கள்.
புகாரில் சொன்னது:
அந்த உணவுகளை கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும், பொழுது மக்களுக்கும் வழங்கி வருகிறார்கள். இதனால் அம்மன் உணவகத்தை சீல் வைத்து மூட வேண்டும். அம்மன் உணவகத்திற்கு சீல் வைத்து மூடாவிட்டால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் தயாராக இருக்கிறேன் என்று முத்துக்குமார் தெரிவித்திருந்தார். இதை அடுத்து அம்மன் உணவகம் சார்பில், காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், தனி நபரின் தூண்டுதலாலும் தான் இந்த புகார் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
விடுதலை 2:
கடைசியாக சூரி நடிப்பில் வெளியான படம் விடுதலை 2. இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியார், கௌதம் மேனன், கென் உட்பட பலர் நடித்து இருந்தார்கள். விடுதலை படத்தின் முதல் பாகம் வெற்றியடைந்த நிலையில் சமீபத்தில் இதன் இரண்டாம் பாகமும் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல் பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.