யூடியூபர் விஜே சித்து மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டிருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாகவே சோசியல் மீடியாவின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் அதிகமாக பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களில் ஒன்று யூடியூப். இந்த யூடியூப் சேனல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் விஜே சித்து.

இவர் தினமும் நடக்கும் நிகழ்வுகளை யதார்த்தத்துடன், காமெடி கலந்த நக்கல் பாணியில் வீடியோக்களாக யூடியூப் இல் பதிவிட்டு வருகிறார். இதனாலே இவர் சீக்கிரமாக தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி இருக்கிறார். இவரது சேனலை 40 லட்சத்துக்கும் அதிகமானோர் பாலோ செய்து இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் விஜே சித்து மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

Advertisement

சித்து மீது புகார்:

அதாவது, யூடியூபர் விஜே சித்து மீது கீழ்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஷெரின் என்பவர் சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார். அதில், போக்குவரத்து விதிகளை மீறியும், அஜாக்கிரதையாக போன் பேசியபடி விஜே சித்து கார் ஓட்டி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அவர் யூடியூப் சேனலில் வெளியிடும் வீடியோக்களில் ஆபாச வார்த்தைகளும், இரட்டை வசனங்களையும் பேசி இருக்கிறார்.

காவல்துறை கொடுத்த விளக்கம்:

இதுபோன்ற வீடியோக்கள் குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்களை தவறான பாதைக்கு வழிவகுக்கும். ஆகவே விஜே சித்து மீது போக்குவரத்து மற்றும் சட்ட விதிகளை மீறியதற்காக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதை அடுத்து சென்னை பெருநகர காவல்துறை, சித்துவுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement

டி டி எஃப் வாசன் விபத்து:

தற்போது இந்த சம்பவம் தான் சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே டி டி எஃப் வாசன் சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறி பைக் ஓட்டியதால் அவர் விபத்துக்குள்ளாகி அதிக அளவு உடலில் எலும்பு முறிவு. காயம் ஏற்பட்டு இருந்தது. அதோடு இவர் போக்குவரத்து விதிகளை மீறியதால் பத்தாண்டுக்கு லைசன்ஸ் ரத்து செய்திருந்தார்கள். தற்போது விஜே சித்துவும் போக்குவரத்து விதிகளை மீறி இருப்பதால் சட்டம் என்ன நடவடிக்கை எடுக்கும்? என்று கேட்டு வருகிறார்கள்.

Advertisement
Advertisement