விஜய் மீது இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் - லியோ பட பாடலால் எழுந்த புதிய சர்ச்சை.

By Arun · 26/6/2023

லியோ பாடலை தடை செய்ய வேண்டும், விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அளித்திருக்கும் புகார் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் நடிப்பில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு.

இந்த படத்தை வம்சி இயக்கி இருந்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, ஷ்யாம் போன்ற பலர் நடித்து இருந்தார்கள். தமன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருந்தார். இந்த படம் பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு வெளியாகி இருந்தது. வாரிசு படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும், உலக அளவில் 300 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது.

லியோ படம்:

இதனை அடுத்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். இதற்கு முன் லோகேஷ் அவர்கள் விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கி இருந்தார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

படம் குறித்த தகவல்:

இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. அதோடு இந்த படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடல் வெளியாகி இருக்கிறது. தற்போது இந்த படத்தினுடைய படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பாடலின் படப்பிடிப்பிற்காக சென்னை ஃபிலிம் சிட்டியில் பிரமாண்டமான செட் ஒன்று போடப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது.

லியோ படத்தின் முதல் பாடல்:

இந்தப்பாடலில் கிட்டத்தட்ட 500 டான்ஸ்டர்கள் விஜயுடன் இணைந்து ஆடுகிறார்களாம். பிரபல நடன இயக்குநர் தினேஷ் இந்தப்பாடலுக்கு நடன வடிவமைப்பு செய்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். இந்த நிலையில் இந்த பாடல் குறித்த சர்ச்சை தற்போது இணையத்தில் வைரலாய் வருகிறது. அதாவது, நா ரெடி பாடலில் போதைப் பொருளை ஊக்குவிக்கும் வகையிலும், புகைபிடிக்கும் காட்சிகளிலும் விஜய் நடித்திருக்கிறார். தற்போது இது தொடர்பாக தான் ரசிகர்கள் கோரிக்கை வைத்து சென்னை காவல் ஆணையர் இடத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.

விஜய் மீது புகார்:

அதில் போதைப் பொருள் புழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரவுடிசத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த பாடல் இருக்கிறது. இதனால் இந்த பாடலை தடை செய்ய வேண்டும். விஜய் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் சமீப காலமாகவே தமிழக அரசும் காவல்துறையும் போதைப்பொருள் சம்பந்தமாக விழிப்புணர்வு நடத்தி வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் விஜயன் இந்த பாடல் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு லியோ பட குழுவினர் தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full