பிக் பாஸ் ஜூலி மீது பாய்ந்த கிட்னி மோசடி புகார், வெளிவந்த ஆதாரங்கள் - பின்னணி என்ன?
பிக் பாஸ் ஜூலி தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கினார். அதற்கு பிறகு ஜூலி சினிமா, சீரியல், நிகழ்ச்சிகள் என்று பிசியாக இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க சமீப காலமாகவே ஜூலி, விஜய்யை விமர்சித்து பதிவிடும் வீடியோக்கள் அனைவருமே அறிந்தது. இது தொடர்பாக ஜூலியை கிட்னி திருடி என்றெல்லாம் வீடியோக்கள் வந்திருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இது தொடர்பாக ஜூலி மீது புகார் எழுந்திருக்கிறது.
இதை திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக், வழக்கறிஞர் நெல்சன் இருவரும் சேர்ந்து தான் புகார் அளித்திருக்கிறார்கள். இது தொடர்பாக அளித்த பேட்டியில் கார்த்திக், விஜயை கலாய்த்து ஜூலி பேசி இருந்தார். அதற்காகத்தான் கோபத்தில் நாங்கள் ஒரு வீடியோ போட்டோம். அப்போது அந்த நான் போட்ட வீடியோவில் கமெண்டில் ஒரு பெண், முதல்முறையாக ஜூலி குறித்து ஒரு பகிரங்க தகவலை சொன்னார். அதில் அவர், எங்கள் சொந்தக்காரர் ஒருவருக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு கிட்னி தேவைப்பட்டது. என்னுடைய பிரண்ட் ஒருவர் மூலம்தான் ஜூலியையும் அவருடைய தோழி அறிமுகம் செய்து வைத்தார்கள்.
ஜூலி சர்ச்சை:
பின் ஜூலியை சந்தித்து ஆபரேஷன் தொடர்பாக பேசினோம். ஆனால், கொஞ்ச நாளிலேயே அந்த உறவினர் இறந்து விட்டார். இதற்காக சில லட்சங்கள் எல்லாம் செலவு செய்தோம். பணத்தை திருப்பி கேட்டதற்கு அவர்கள் எதையும் சொல்லாமல் அமைதியாகிவிட்டார்கள். அதோடு ஏதாவது பிரச்சனை செய்தால் நீங்களும் தான் சிக்கிக் கொள்வீர்கள் என்றெல்லாம் எங்களை மிரட்டினார்கள். அதனால் நாங்களும் அமைதியாக விட்டோம் என்று கூறியிருந்தார். அதற்குப் பிறகுதான் நாங்கள் ஜூலிக்கும் கிட்னி மோசடி கும்பலுக்கும் தொடர்பு இருக்கு என்று வீடியோ போட்டோம். அதை பார்த்துவிட்டு புதுச்சேரி இளைஞர் அதிர்ச்சி தரமான சம்பவம் ஒன்றை கூறியிருந்தார்.
https://www.youtube.com/watch?v=bXkeXLBZObA
ஜூலி மீது புகார்:
அதில் அவர், என்னுடைய அப்பாவுக்கு கிட்னி மாற்று சிகிச்சை தேவைப்பட்டிருந்தது. உறவினர்கள் தர ஒத்துக்காததால் ஒரு என்சியோ மூலம் ஜூலியினுடைய தொடர்பு கிடைத்தது. மெடிக்கல் கேம்ப்புகள் மூலம் ஜூலிக்கு கிட்னி தேவைப்படும் தகவல் கிடைக்கும். கிட்னியை யாரிடமிருந்து வாங்குகிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை. என்னுடைய அப்பாவிற்கு கிட்னி தேவைப்பட்டதால் ஜூலி அவருடைய டீம் சேர்ந்து உதவி செய்வதாக சொன்னார்கள். ஆனால், 9 லட்சம் பணம் தந்தால் போதும் என்று சொன்னார்கள். நாங்களும் பணத்தை ரெடி பண்ணி தந்தோம். ஆனால், ஆப்ரேஷன் நடப்பதற்குள் என் அப்பா இறந்துவிட்டார். பணத்தை திருப்பி கேட்டதற்கு ஜூலி தரப்பில் எந்த ரெஸ்பான்ஸ்மே இல்லை.
ஜூலி செய்த மோசடி:
பின் என்னுடைய நண்பர்கள் மூலம் ஜூலி இருந்த இடத்திற்கு போய் மிரட்டினோம். உடனே அவர்கள் 8 லட்சத்தை தந்து விட்டார்கள் என்று சொல்லியிருந்தார். இவர்கள் இரண்டு பேரும் தான் கிட்னி மோசடி நடப்பதற்கு உதாரணம். இதை வைத்து தான் நாங்கள் புகார் அளித்தோம். என்னுடைய நண்பர் வழக்கறிஞர் நெல்சன் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கலாம் என்றார். இப்போது இது தொடர்பாக விசாரணையும் நடந்து வந்திருக்கிறது என்று கூறியிருந்தார். இதனை அடுத்து வழக்கறிஞர் நெல்சன், தமிழ்நாட்டில் நடக்கிற கிட்னி மோசடிக்கு பின்னாடி ஒரு பெரிய நெட்வொர்க் இருக்கிறது. இது தொடர்பாக விசாரித்து நாங்கள் ஐஜிக்கு தகவல்களை அனுப்பி வைக்கிறோம். போலீஸ் கொஞ்சம் பிஸியாக இருக்கிறார்கள். தேர்தல் முடிந்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க இருக்கிறோம். தேவைப்பட்டால் பாதிக்கப்பட்டவரின் பெயரில் இருந்து வழக்கை தொடங்கலாம் என்று இருக்கிறோம் என்று கூறி இருக்கிறார்.