பிரபல நடிகை தமன்னாவை பற்றி பள்ளி புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ள செய்திதான் இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தமன்னா. இவர் தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு ரவி கிருஷ்ணன் நடித்த ‘கேடி’ படம் மூலம் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானவர். ஆனால், அதற்கு முன்பாகவே இவர் ஹிந்தி படங்களின் மூலம் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார்.

அதன் பிறகு இவர் தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஷால் என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் என பிறமொழி படங்களிலும் வலம் வந்திருக்கிறார். அதிலும் சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கில் வெளியான ‘பாகுபலி’ படத்தின் மூலம் தான் நடிகை தமன்னாவிற்கு சினிமா மார்க்கெட் எங்கேயோ சென்றது.

Advertisement

பாடப்புத்தகத்தில் தமன்னா:

தற்போது கவர்ச்சி நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா பற்றி பெங்களூரு ஹெப்பால் பகுதியில் ‘சிந்தி’ என்ற தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது ‘சிந்த் பிரிவினைக்குப் பிறகு இந்திய மக்களின் வாழ்க்கை’ என்கிற பாடத்தில் நடிகை தமன்னா பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. இதனால் கொந்தளித்த அந்த பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

பெற்றோரின் புகார்:

அதாவது நடிகை தமன்னா குறித்து தங்கள் குழந்தைகள் அந்த பாடத்தில் கற்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து ஆங்கில வழி பள்ளிகளுக்கான நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். இந்தப் புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். இச்சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

தமன்னா திரைப்படணம்:

சமீப காலமாக இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் ஹிந்தியில் தமன்னா நடிப்பில் வந்த படம் ‘பவுன்சர்’. இந்த படத்தில் இவர் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்திருந்தார். அதோடு இவர் சில வெப் சீரியசரியிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் தமன்னா ஆடி இருந்த ‘காவலா பாடல்’ ரசிகர்கள் மத்தியில் பயங்கர ட்ரெண்டிங் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தமன்னா நடிக்கும் படங்கள்:

தற்போது நடிகை தமன்னா பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் நடிப்பில் தமிழில் சமீபத்தில் வெளிவந்த ‘அரண்மனை 4’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது. அரண்மனை போர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை தமன்னா ஹிந்தியில் வேதா, ஸ்ட்ரீ 2 மற்றும் தெலுங்கில் ஓடெலா 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement