நிகழ்ச்சியில் சம்யுக்தா சமைத்த சாப்பாட்டில் என்ன ஆச்சு? ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் விபரீதம்
விஜய் டிவியில் குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி இதுவரை ஆறு சீசன்கள் முடிந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே, இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். எப்போதுமே பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த உடனே குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கும். அதோடு கடந்த நான்கு சீசன்களாக நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் கடந்த ஐந்தாவது சீசன் நிகழ்ச்சியில் இருந்து விலகி, சன் டிவியில் ஒளிபரப்பான ‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சிக்கு நடுவராக சென்றார்.
அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக குக் வித் கோமாளி 5 நிகழிச்சியில் களம் இறங்கி இருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியை ரக்ஷன் தான் தொகுத்து வழங்கி இருந்தார்கள். பின் கடந்த சீசனில் செஃப் கௌஷிக் நடுவராக களமிறங்கி இருந்தார். தற்போது குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி இருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியில் வித்தியாசமாக கணவன்- மனைவி ஜோடிகள் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சி:
அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் அரவிந்த்- சங்கீதா, பிக் பாஸ் கானா வினோத்- பாக்கியலட்சுமி, பிக் பாஸ் சம்யுக்தா- அனிருதா ஸ்ரீகாந்த், அறந்தாங்கி நிஷா-ரியாஸ் கான், சித்து-ஸ்ரேயா, சாந்தா-மகேந்திரன், ராஜி-ட்ராவிட், மஞ்சுநாதன்-ராஜேஸ்வரி ஆகியோர் போட்டியாளராக கலந்து இருக்கிறார்கள். நிகழ்ச்சி தொடங்கிய நாளிலிருந்து காமெடி கலாட்டா கலவரங்கள் என்று நன்றாக இருக்கிறது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து அறந்தாங்கி நிஷா-ரியாஸ், சாந்தா- மகேந்திரன் இரண்டு ஜோடியுமே வெளியேறி இருக்கிறார்கள்.
நெட்டிசன்கள் ட்ரோல்:
கடந்த வாரம் போட்டியாளர்களை வெள்ளை அணி, ஆரஞ்சு அணி என்று இரண்டு அணிகளாக பிரித்து இருக்கிறார்கள். அதில் இரு அணிகளுமே விஜய் டிவி சீரியல் பிரபலங்கள் கொடுத்த சமையலை சமைத்து தர சொல்லியிருந்தார்கள். அதற்கு ஏற்ப இரண்டு அணிகளுமே சூப்பராக சமைத்து தந்தார்கள். அதில் வெள்ளை அணி தான் வென்றிருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் நேற்று எபிசோட்டில் சம்யுக்தா சமைத்திருந்த சாப்பாட்டை தான் நெட்டிசன்கள் விமர்சித்தும் வருகிறார்கள். இப்படி ஈ விழுந்த சாப்பாட்டை தான் நடுவர்களுக்கும் விருந்தினர்களுக்கும் கொடுப்பதா? பிரபலமான நிகழ்ச்சியில் இப்படி எல்லாம் நடந்து கொள்வதா? என்றெல்லாம் ட்ரோல் செய்து வருகிறார்கள்.
சம்யுக்தா விளக்கம்:
இந்நிலையில் இது தொடர்பாக பிக் பாஸ் சம்யுக்தா, அந்த வீடியோவை பார்த்துவிட்டு நான் ஷாக் ஆகி விட்டேன். நாங்கள் நிகழ்ச்சியில் ரொம்ப சுத்தமான ஆர்கானிக்கான உணவை தான் சமைத்து தருகிறோம். நாங்கள் சமைத்த சாப்பாட்டில் ஒரு பிளேட்டை இன்னொரு ஸ்டுடியோக்கு அனுப்பி இருந்தோம். அங்கு சாப்பாட்டை ஃபோக்கஸில் சூட் நடத்தி இருந்தார்கள். ஒருவேளை அங்கு இந்த தவறு நடந்திருக்கலாம். ஆனால், நாங்கள் ஜட்ஜ்க்கும் விருந்தினருக்கும் கொடுத்த சாப்பாட்டில் எதுவும் இல்லை. இந்த தவறு அந்த ஸ்டுடியோவில் நடந்திருக்கலாம். இதை நினைத்தால் எனக்கு கஷ்டமாக இருக்கிறது, வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார்.