குக் வித் கோமாளி பிரபலத்துக்கு அடித்த ஜாக்பாட், யாருக்கு? என்ன தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்

By subhashini · 21/8/2024

குக் வித் கோமாளி பிரபலத்துக்கு அடித்திருக்கும் ஜாக்பாட் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், நான்கு சீசன்களை கடந்து வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது ‘குக் வித் கோமாளி சீசன் 5’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த முறை நிகழ்ச்சியில் இருந்த நடுவர் வெங்கடேஷ் பட், தயாரிப்பு Media Masons 10, நிகழ்ச்சியின் இயக்குனர் ஆகியோர் விலகி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. தற்போது இந்த நிகழ்ச்சியில் தாமுவுடன் மற்றொரு நடுவராக மாதம்ப்பட்டி ரங்கராஜ் களம் இறங்கி இருக்கிறார். இந்த சீசனில் புதிய கோமாளிகளாக ராமர், ஷப்பனம், அன்ஷிதா, KPY வினோத் ஆகியோர் இணைந்துள்ளனர்.

குக் வித் கோமாளி 5:

அதேபோல், இந்த சீசனில் போட்டியாளர்களாக ஷெர்லின் ஜோயா, அக்ஷய் கமல், நடிகை திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சூப்பர் சிங்கர் பூஜா, யூடியூபர் இர்ஃபான், நடிகர் வசந்த் வசி, பிரியங்கா தேஷ்பாண்டே, டிடிவி கணேஷ் மற்றும் சுஜிதா ஆகியோர் போட்டியாளர்களாக களம் இறங்கினார்கள். இந்த நிகழ்ச்சி தொடங்கி சில வாரங்கள் கடந்து விறுவிறுப்பாக கொண்டு செல்ல புது கான்செப்ட்கள் வழங்கி வருகிறார்கள்.

வெளியேறிய நபர்கள்:

கோமாளிகள் வழக்கம் போல் குக்குகளையும், நடுவர்களையும் கலாய்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதோடு இந்த முறை நிகழ்ச்சியை ரக்ஷன் மற்றும் மணிமேகலை இருவருமே தொகுத்து வழங்கி வருகிறார்கள். மேலும், இதுவரை இந்த நிகழ்ச்சியிலிருந்து குறைவான மதிப்பெண்களை பெற்று ஸ்ரீகாந்த் தேவா, வசந்த், ஜோயா,பூஜா ஆகிய நான்கு போட்டியாளர்கள் வெளியேறி இருந்தார்கள். மேலும், இந்த நிகழ்ச்சி சிரிக்க வைக்கும் மட்டுமில்லாமல் பல பேருக்கு வெள்ளி திரையில் வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது.

கெமி குறித்த தகவல்:

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக மக்கள் மத்தியில் மிக பிரபலமாக இருப்பவர் விஷாலி கெமி. இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன்பு வீடியோ ஜாக்கி, ரேடியோ ஹோஸ்ட், மாடல் பைக்கர் என பல வேலைகளை செய்திருந்தார். இருந்தாலும் இவருடைய திறமையை நிரூபிக்கும் ஒரு இடமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது கெமி சினிமாவில் களமிறங்கி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கெமி நடிக்கும் புது படம்:

அதாவது கெமி அவர்கள் நயன்தாரா நடிக்கும் படத்தில் தான் கமிட் ஆகி இருக்கிறார். இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் இடம் துணை இயக்குனராக பணியாற்றி இருந்தவிஷ்ணு தான் இயக்குகிறார். தற்போது இந்த படத்தில் கெமி இணைந்து இருக்கும் தகவல் இணையத்தில் வெளியானது தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full