குக் வித் கோமாளி 5ன் டைட்டில் பட்டத்தை வென்றது யார் தெரியுமா? இரண்டாம் இடம் இவருக்கு தான்
குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சி நான்கு சீசன்கள் கடந்து தற்போது ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே, இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது ‘குக் வித் கோமாளி சீசன் 5’ ஒளிபரப்பாகி வருகிறது. இந்த முறை நிகழ்ச்சியில் இருந்து நடுவர் வெங்கடேஷ் பட், தயாரிப்பு நிறுவனம் Media Masons 10, நிகழ்ச்சியின் இயக்குனர் ஆகியோர் விலகி இருந்தது பலருக்கும் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. தற்போது இந்த நிகழ்ச்சியில் தாமுவுடன் மற்றொரு நடுவராக மாதம்ப்பட்டி ரங்கராஜ் களம் இறங்கி இருக்கிறார்.
குக் வித் கோமாளி 5:
அதேபோல், இந்த சீசனில் போட்டியாளர்களாக ஷெர்லின் ஜோயா, அக்ஷய் கமல், நடிகை திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சூப்பர் சிங்கர் பூஜா, யூடியூபர் இர்ஃபான், சீரியல் நடிகர் வசந்த் வசி, தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, டிடிவி கணேஷ் மற்றும் சீரியல் நடிகை சுஜிதா ஆகியோர் கலந்து இருக்கிறார்கள். அதேபோல் இந்த சீசனில் புதிய கோமாளிகளாக ராமர், ஷப்பனம், அன்ஷிகா, KPY வினோத் ஆகியோர் இணைந்துள்ளனர்.
நிகழ்ச்சி குறித்த தகவல்:
இந்த நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல புதுப்புது கான்செப்ட் வழங்கி இருந்தார்கள். வழக்கம்போல் கோமாளிகள், குக்குகளையும் நடுவர்களையும் கலாய்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் இருந்து குறைவான மதிப்பெண்களை பெற்று ஸ்ரீகாந்த் தேவா, வசந்த் வசி, பூஜா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள். கடந்த வாரம் திவ்யா துரைசாமி மற்றும் VTV கணேஷ் ஆகிய இரண்டு போட்டியாளர்களை திடீரென நடுவர்கள் வெளியேற்றி இருந்தார்கள்.
இறுதி சுற்று:
அதனை தொடர்ந்து கடந்த வாரம் செமி பைனல் நடைபெற்றது. அதில் பிரியங்கா, சுஜிதா, இர்ஃபான், அக்ஷய் கமல் ஆகியோர் களம் இறங்கி மோதி இருந்தார்கள். அதில் சீரியல் நடிகர் அக்ஷய் கமல் குறைவான மதிப்பெண்களை பெற்று போட்டியிலிருந்து வெளியேறி இருந்தார். அதனால் இம்முறை இறுதிப் போட்டியாளர்களாக பிரியங்கா தேஷ் பாண்டே, இர்ஃபான், சுஜிதா ஆகிய மூவரும் தேர்வாகி இருந்தார்கள்.
டைட்டில் வென்றவர்:
இந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் 5ன் டைட்டில் பட்டதை தொகுப்பாளினி பிரியங்கா பெற்றிருக்கிறார். இரண்டாவது இடத்தை இர்பான் பிடித்திருப்பதாக கூறப்படுகிறது. அனைவருமே நடிகை சுஜிதா தான் முதலிடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்த்தார்கள். இருந்தாலுமே, பிரியங்கா விஜய் டிவியின் செல்ல பிள்ளை என்பதால் அவருக்கு கொடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆக மொத்தம் இறுதி கட்ட நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.