அனைவரும் எதிர்பார்த்த குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சி எப்போ தெரியுமா? சுடச்சுட வெளியான அப்டேட்
குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சி குறித்த லேட்டஸ்ட் அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில ரியாலிட்டி ஷோக்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி இதுவரை ஐந்து சீசன்கள் முடிந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே, இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான்.
எப்போதுமே பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த உடனே குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கும். அந்த வகையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கியது. நான்கு சீசன்களாக நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் கடந்த முறை நிகழ்ச்சியில் இருந்து விலகி, சன் டிவியில் ஒளிபரப்பான ‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சிக்கு நடுவராக சென்றார். அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக குக் வித் கோமாளி 5 நிகழிச்சியில் களம் இறங்கி இருந்தார்.
குக் வித் கோமாளி:
கடந்த முறை நிகழ்ச்சியை ரக்ஷன் மற்றும் மணிமேகலை தொகுத்து வழங்கி இருந்தார்கள். சினிமா, சீரியலை விட இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானோர் தான் அதிகமாக இருக்கிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியின் நான்கு சீசன்களையும் மீடியா மேஷன்ஸ் என்ற நிறுவனம் தான் தயாரித்திருந்தது. ஆனால், கடந்த ஆண்டு இவர்கள் விஜய் டிவியில் இருந்து வெளியேறி இருப்பதாக அறிவித்திருந்தார்கள். அதோட ஐந்தாவது சீசனையும் தயாரிக்கும் பொறுப்பிலிருந்தும் வெளியேறிட்டார்கள். அதனால் தான் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் விலகி விட்டார்.
https://www.youtube.com/watch?v=cF_Jgs9L95Y
நிகழ்ச்சி குறித்த தகவல்:
கடந்த சீசன் தான் பல சர்ச்சைக்குரிய நிகழ்ச்சியாக இருந்தது. காரணம், பல பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த சீசனில் ஆரம்பத்திலிருந்து மணிமேகலை -பிரியங்கா இடையே சலசலப்பு ஏற்பட்டு இருந்திருந்தது. நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை தொடங்கும் நிலையில் இருவருக்கும் இடையே இருந்த பிரச்சனை பூகம்பமாக வெடித்து நிகழ்ச்சியை விட்டே மணிமேகலை வெளியேறி விட்டார். அதே போல் டைட்டில் பட்டதை பிரியங்கா தான் பெற்றிருந்தார். இதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் வருமா? என்று ரசிகர்கள் மத்தியில் குழப்பம் நிலவிக் கொண்டிருந்தது.
https://www.youtube.com/watch?v=2zRpKQBylok
குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சி:
பின் குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்பட்டது. பின் இந்த முறை சர்ப்ரைஸ் ஆக பிக் பாஸ் 8 போட்டியாளர் சௌந்தர்யா என்ட்ரி கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதை அடுத்து நிகழ்ச்சி தொடர்பாக ப்ரோமோக்கள் வெளியாகி இருந்தது. அதில் மூன்றாவது ப்ரோமோவில், இந்த முறை ஆட்டம் புதுசு, புது ஸ்கூல், புது ரூல், புது ஜட்ஜ் என்று ஏற்கனவே இருந்த இரண்டு நடுவர்கள் மூன்றாவது நடுவரை அறிமுகப்படுத்தி இருந்தார்கள். அவர் வேறு யாரும் இல்லை செஃப் கௌஷிக். இவர் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று இருந்தார்.
நிகழ்ச்சி அப்டேட்:
இப்படி இருக்கும் நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியினுடைய லேட்டஸ்ட் அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இந்த நிகழ்ச்சி மே நான்காம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இது தொடர்பாக விஜய் டிவியில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள். தற்போது இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகிறார்கள்.