என்னை மன்னித்து விடுங்கள் - சுனிதா போட்ட பதிவால் பதறி போன ரசிகர்கள் - என்ன ஆச்சு தெரியுமா?

By Arun · 18/7/2022

குக் வித் கோமாளி சுனிதா பதிவிட்டு இருக்கும் திடீர் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்த சிலர் சினிமாவிலும் தற்போது ஜொலித்து வருகிறார்கள். சந்தானம் தொடங்கி சிவகார்த்திகேயன் வரை அனைவருமே விஜய் டிவி பிரபலங்கள் தான். அந்த வகையில். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நடன நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் சுனிதா.

இவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தவர் நடிகை சுனிதா. இதனைத் தொடர்ந்து இவர் ஜோடி நம்பர் 1 சீசன் 8 & 9 உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இவர் நடனத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இதனால் இவர் பல நடன நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார்.

சுனிதா சின்னத்திரைப்பயணம்:

இதுமட்டுமில்லாமல் இவர் சிங்கிள் பொண்ணுங்க, காமெடி ராஜா கலக்கல் ராணி உள்ளிட்ட பல நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார். அதன் பிரபலத்தினால் இவர் ஒரு சில சீரியல்களில் நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் தனுஷ் நடித்த “3” படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தோழியாகவும் நடித்திருந்தார். அதன் பின்னர் ஒரு சில திரைப்படங்கள் மற்றும் சீரியல்களிலும் நடித்து இருந்தார். கடைசியாக இவர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா 3 படத்திலும் நடித்து இருக்கிறார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி:

இவருடைய தனி சிறப்பே தமிழ் பேசும் அழகு தான். சுனிதாவுக்கு அவ்வளவாக தமிழ் பேச தெரியாது என்றாலும் அவர் முயற்சி செய்து பேசும் தமிழே அவருக்கு பிளஸ் பாய்ண்ட் ஆகிவிட்டது. தற்போது இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வருகிறார். ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி தான் டாப்பில் இருக்கிறது. தற்போது குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சி சென்று கொண்டு இருக்கிறது.

சுனிதா பதிவிட்ட பதிவு:

இந்த நிகழ்ச்சியின் மூலம் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார் சுனிதா. தற்போது இவர் தனியாக யுடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் தன்னுடைய புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது சுனிதா அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்ட் ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், ஒருவரை மன்னித்து விட வேண்டும் என்றால் உடனே மன்னித்து விடுங்கள். அது அவர்களுக்கு நல்லதோ இல்லையோ நமக்கு ரெம்ப நல்லது.

பதிவில் சுனிதா சொன்னது:

எதனையும் மனதில் வைத்து கொண்டால் நமக்கு தான் பிரச்சனை. நமக்கு மனசு நிம்மதியா இருந்த போதும் என்று பதிவிட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன ஆயிற்று? ஏதேனும் பிரச்சினையா? என கேள்வி கேட்டு வருகின்றனர். இதற்கு சுனிதா தரப்பில் இருந்து எந்த பதிலும் வெளியாகவில்லை. ஆனால், சுனிதாவுக்கு பிரச்சனை என்று மட்டும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full