'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் டைட்டில் மாறுகிறதா? - காரணம் என்ன? முழு விவரம் இதோ

By subhashini · 25/12/2024

தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில், 'குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி இதுவரை ஐந்து சீசன்கள் முடிந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே, இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான்.

எப்போதுமே பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த உடனே குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கும். அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் ‘குக் வித் கோமாளி 5’ தொடங்கியது. நான்கு சீசன்களாக நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி, சன் டிவியில் ஒளிபரப்பான ‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சிக்கு நடுவராக சென்றார். அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக குக் வித் கோமாளி 5 நிகழிச்சியில் களம் இறங்கினார். இந்த முறை நிகழ்ச்சியை ரக்ஷன் மற்றும் மணிமேகலை தொகுத்து வழங்கி இருந்தார்கள்.

குக் வித் கோமாளி:

சினிமா, சீரியலை விட இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியின் நான்கு சீசன்களையும் மீடியா மேஷன்ஸ் என்ற நிறுவனம் தான் தயாரித்திருந்தது. ஆனால், கடந்த ஆண்டு இவர்கள் விஜய் டிவியில் இருந்து வெளியேறி இருப்பதாக அறிவித்திருந்தார்கள். அதோட ஐந்தாவது சீசனையும் தயாரிக்கும் பொறுப்பிலிருந்தும் வெளியேறிட்டார்கள். அதனால் தான் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் விலகி விட்டார்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

பின் மீடியா மேஷன்ஸ் நிறுவனம் சன் டிவியில் தயாரித்த டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சியை தயாரித்தது. அந்த நிகழ்ச்சிக்கு நடுவராகவும் வெங்கடேஷ் பட் பொறுப்பேற்று இருந்தார். அதற்குப் பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மற்றொரு நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் களமிறங்கி இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் நிகழ்ச்சியின் உடைய டைட்டில் மாற இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, கூடிய விரைவிலயே பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நிறைவடைகிறது. இன்னும் சில மாதங்களில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அடுத்த சீசன் தொடங்கப்படும்.

நிகழ்ச்சி டைட்டில் மாற்றம்:

அதோடு இந்த நிகழ்ச்சியின் பெயர் மாற்றப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக
நிகழ்ச்சிக்கு நெருக்கமானவர்கள் அளித்த பேட்டியில், டிவியில் வழக்கமாக நடக்கும் சமையல் நிகழ்ச்சியினுடைய எதிர்பார்ப்பை உடைத்ததே குக் வித் கோமாளி தான். பொதுவாகவே சமையல் நிகழ்ச்சி என்றால் பெண்கள் மட்டும்தான் ரசிகர்களாக இருப்பார்கள். ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு சிறியவர்கள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள் என எல்லா தரப்பினர் மத்தியிலும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரபலங்கள் கூட ஆர்வம் காட்டுகிறார்கள்.

டைட்டில் மாற்ற காரணம்:

மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தான் பல பேருக்கு சினிமாவில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கிறது. முதல் நான்கு சீசன் வரை எந்த பிரச்சனையுமே இல்லை. ஐந்தாவது சீசன்தான் தயாரிப்பு நிறுவனம் விலகி விட்டது. அப்போதே டைட்டில் போய்விடும் என்று நினைத்தார்கள். ஆனால், ஐந்தாவது சீசனும் அதே டைட்டிலோடு தான் ஒளிபரப்பானது. டைட்டில் உரிமை சேனல் வசம் தான் இருக்கிறது. மேக்கிங் வேறு டீம் என்பதால் வேறொரு டைட்டில் வைத்து நிகழ்ச்சியை பிரபலம் ஆக்கலாம் என்று நினைத்தார்கள். எந்த ஒரு இறுதி முடிவையும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் இன்னும் எடுக்கவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு தான் இதற்கான முடிவை எடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full