சினிமா உலகில் சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. ஷகிலா பெயர் சொன்னால் போதும் அனைத்து ரசிகர்களும் குஷியாகி விடுவார்கள். அந்த அளவிற்கு இவருடைய படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டிய நடிகை. இவர் தமிழ் சினிமா உலகில் துணை நடிகையாக தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கினார். இவர் ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். கவுண்டமணியுடன் சில படங்களில் நகைச்சுவை காட்சிகளிலும் நடித்து இருந்தார்.

இவருடைய குடும்ப சூழ்நிலை காரணமாக இவர் மலையாள கரையோரம் ஒதுங்கி கவர்ச்சி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் முதலில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தது மலையாள மொழி படங்களில் தான். அதனாலேயே இவருக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் உள்ளார்கள் என்று சொல்லும் அளவுக்கு கவர்ச்சி விருந்து படைத்தவர்.இவருடைய கவர்ச்சி படங்களுக்கு ரசிகர்கள் மயங்காதவர்கள் இருக்க மாட்டார். மேலும், ஷகீலா தனது வாழ்கை வரலாற்றை படமாக எடுத்துள்ளார்.

இதையும் பாருங்க : உதயநிதி படத்தில் இருந்து நீக்கப்படவில்லையாம் அவரே விலகிட்டாராம். அஸ்வின் சொன்ன ஷாக்கிங் காரணம் (இப்பவே இப்படி பண்ணா எப்படி)

Advertisement

சமீபத்தில் பேசிய ஷகீலா, எனக்கு தெரிந்து நான் செய்த தவறை தற்போது சினிமா துறைக்கு வரும் நடிகைகள், படிக்கும் மாணவிகள் அனைவருக்கும் ஒன்று சொல்லுகிறேன்.என்னை போல் யாரும் ஏமாந்து விடாதீர்கள். அதைத்தான் என் புக்கில் எழுதி இருக்கிறேன். இதைத்தான் படமாக எடுத்து இருக்கிறார்கள். பெண்களுக்கு மேசேஜாக இந்த திரைப்படம் இருக்கும் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய ஷகீலா, நான் கருத்துள்ள படம் தான் நடித்தேன்.

ஆனால், அந்த படங்களில் மற்ற நடிகைகள் அவ்த்து போட்டு நடித்தால் நான் என்ன பண்றது. குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் என்னை பலரும் அம்மாவாகவும், சகோதரியாகவும் பார்க்கின்றனர். சமீபத்தில் கூட எனக்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதில் குளிக்கும் சீன் இருக்கும் என்று சொன்னதால் அந்த படத்தில் நடிக்க நான் மறுத்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement