ஒரு எபிசோட்டிற்கு 'குக் வித் கோமாளி' போட்டியாளர்கள் வாங்கும் சம்பளம் பட்டியல்- யாருக்கு அதிகம் தெரியுமா?
'குக் வித் கோமாளி சீசன் 5'ல் கலந்து கொண்ட பிரபலங்கள் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பள விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் நான்கு சீசன்களை கடந்து ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான்.
மேலும், நான்கு சீசன்களிலும் இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட், தாமு தான் நடுவர்களாக இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் நிகழ்ச்சியில் இருந்து நடுவர் வெங்கடேஷ் பட் விலகி இருந்தது பலருக்கும் அதிர்ச்சி. பின் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்த நிறுவனம் Media Masons 10, நிகழ்ச்சியின் இயக்குனர் ஆகியோர் விலகி இருந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. அதன் பின் இந்த நிகழ்ச்சியில் தாமுடன் மற்றொரு நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் களம் இறங்கி இருக்கிறார். பல பிரச்சனைகளுக்கு நடுவில் இந்த குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி:
இந்த சீசனில் பழைய கோமாளிகளுடன் , புதிய கோமாளிகளாக ராமர், ஷப்பனம், அன்ஷிதா, kpy வினோத் ஆகியோர் இணைந்துள்ளனர். அதே போல இந்த சீசனில் போட்டியாளர்களாக ஷெர்லின் சோயா, அக்ஷய் கமல், நடிகை திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சூப்பர் சிங்கர் பூஜா, ஸ்ரீகாந்த், ரிவியூவர் இர்பான், பாண்டியன் பூஜா, சீரியல் நடிகர் வசந்த் வசி, தொகுப்பாளினி பிரியங்கா தேஷ் பாண்டே, விடிவி கணேஷ் மற்றும் சீரியல் நடிகை சுஜிதா ஆகியோர் போட்டியாளராக களமிறங்கி இருக்கின்றனர்.
நிகழ்ச்சி குறித்த தகவல்:
மேலும், நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல புது கான்செப்ட்கள் வழங்கி வருகிறார்கள். கோமாளிகளும் வழக்கம் போல் குக்குகளையும் நடுவர்களையும் கலாய்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த வாரம் நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்களுக்கு பிடித்த உணவை சமைத்துக் கொடுக்கும் டாஸ்க்கை கொடுத்திருந்தார்கள். இதனால் ஒவ்வொரு சினிமா பிரபலங்களும் தங்களுக்கு பிடித்த உணவை கூறி இருந்தார்கள். நிகழ்ச்சியும் சிறப்பாக சென்று கொண்டு இருக்கிறது.
பிரபலங்கள் சம்பளம் விவரம்:
இந்நிலையில் 'குக் வித் கோமாளி 5'ல் கலந்து கொண்ட போட்டியாளர்கள் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் குறித்த விபரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
திவ்யா துரைசாமி- ஒரு எபிசோடுக்கு 12,000
பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா- 18000
தொகுப்பாளினி பிரியங்கா- 18000
வி டிவி கணேஷ் -15000
பாடகி பூஜா வெங்கட்- 9000
ஷாலின் சோயா -10,000
அக்ஷய் கமல்- 10,000
யூடியூபர் இர்ஃபான்- 15000