குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்களின் சம்பள பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் நான்கு சீசன்களாக வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி முடிந்த உடனே குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஆரம்பிப்பது தான் விஜய் டிவியுடன் வழக்கம். அந்த வகையில் இந்த சீசன் வரும் 27 ஆம் தேதி துவங்கி இருந்தது. இந்த சீஸனின் வெங்கடேஷ் பட் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக மத்தம்பட்டி ரங்கராஜ் தாமுவுடன் நடுவராக இணைந்து இருக்கிறார். மேலும், விஜே ரக்சன், மணிமேகலை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர்.

Advertisement

அதேபோல் இதுவரை வந்த சீசனங்களில் கலந்து கொண்ட கோமாளிகளின் சிலர் இந்த சீசனிலும்வந்துள்ளனர். அது போல சில புது கோமாளிகளும் இந்த சீசனில் பங்கேற்று இருக்கின்றனர்.அந்த வகையில் இந்த சீசனில் புதிய கோமாளிகளாக ராமர், ஷப்பனம், அன்ஷிதா, kpy வினோத் என்று புது கோமாளிகள் இணைந்துள்ளனர். அதே போல இந்த சீசனில் போட்டியாளர்களாக ஒரு சில விஜய் டிவி பிரபலங்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

இந்த சீசனில் ஷெர்லின் சோயா, அக்ஷய் கமல், நடிகை திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சூப்பர் சிங்கர் பூஜா, ஃபுட் ரிவியூவர் இர்பான், பாண்டியன் ஸ்டார் சீரியல் நடிகர் வசந்த் வசி, தொகுப்பாளினி பிரியங்கா தேஷ் பாண்டே, விடிவி கணேஷ் மற்றும் சீரியல் நடிகை சுஜிதா ஆகியோர் போட்டியாளராக களமிறங்கி இருக்கின்றனர். இதில் ரசிகரகளுக்கு பரிட்சியமில்லாத சில போட்டியாளர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

Advertisement

அந்த வகையில் அக்‌ஷய் கமல், ஷாலின் ஜோயா,திடியன், போன்றவர்கள் ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத போட்டியாளர்கள். பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியை போல குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேரும் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளுக்கும் பிரபலத்திற்கு ஏற்றார் போல சம்பளம் கொடுக்கப்படும். அந்த வகையில் இந்த சீசனில் பங்கேற்றவர்களின் சம்பள விவரம் வெளியாகி இருக்கிறது.

Advertisement

சம்பள விவரம் :

  1. பிரியங்கா- ரூ. 18,000
  2. சுஜிதா- ரூ. 18,000
  3. விடிவி கணேஷ்- ரூ. 15,000
  4. இர்பான்- ரூ. 15,000
  5. திவ்யா துரைசாமி- ரூ. 12,000
  6. ஸ்ரீகாந்த் தேவா- ரூ. 10,000
  7. வசந்த்- ரூ. 10,000
  8. அக்ஷய் கமல்- ரூ. 10,000
  9. ஷாலின் சோயா- ரூ. 10,000
  10. வசந்த்- ரூ. 10,000

இந்த சம்பளம் வார சம்பளமும். ஒரு வாரத்தில் ஒரே நாளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடுகளுக்கான படப்பிடிப்பு முடிந்துவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement