குக் வித் கோமாளி 5ல் நான்காவதாக வெளியேறியது யார் தெரியுமா? அதிருப்தியில் ரசிகர்கள்
குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டிருக்கும் போட்டியாளர் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் நான்கு சீசன்களை கடந்து ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.
அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். மேலும், இந்த நான்கு சீசன்களிலும் வெங்கடேஷ் பட், தாமு தான் நடுவர்களாக இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் நிகழ்ச்சியில் இருந்து நடுவர் வெங்கடேஷ் பட், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்த நிறுவனம் Media Masons 10, நிகழ்ச்சியின் இயக்குனர் ஆகியோர்கள் விலகி இருந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது.
குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி:
அதன் பின், இந்த நிகழ்ச்சியில் தாமுடன் மற்றொரு நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் களம் இறங்கி இருக்கிறார். பல பிரச்சனைகளுக்கு நடுவில் சில மாதங்களுக்கு முன் தான் இந்த குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதே போல இந்த சீசனில் போட்டியாளர்களாக ஷாலின் ஜோயா, அக்ஷய் கமல், நடிகை திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சூப்பர் சிங்கர் பூஜா, ரிவியூவர் இர்பான், நடிகர் வசந்த் வசி, தொகுப்பாளினி பிரியங்கா தேஷ் பாண்டே, விடிவி கணேஷ் மற்றும் நடிகை சுஜிதா ஆகியோர் களமிறங்கி இருக்கின்றார்கள்.
நிகழ்ச்சி குறித்த தகவல்:
இந்த சீசனில் பழைய கோமாளிகளுடன், புதிய கோமாளிகளாக ராமர், ஷப்பனம், அன்ஷிதா, kpy வினோத் ஆகியோர் இணைந்துள்ளனர். மேலும், நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல புது கான்செப்ட்கள் வழங்கி வருகிறார்கள். கோமாளிகளும் வழக்கம் போல் குக்குகளையும், நடுவர்களையும் கலாய்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதோடு இந்த முறை நிகழ்ச்சியை ரக்ஷன் மற்றும் மணிமேகலை இருவருமே தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
வெளியேறிய நபர்கள்:
மேலும், இதுவரை இந்த நிகழ்ச்சியிலிருந்து குறைவான மதிப்பெண்களை பெற்று ஸ்ரீகாந்த் தேவா, வசந்த், ஜோயா ஆகிய மூன்று போட்டியாளர்கள் வெளியேறி இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் சுற்று நடைபெற்றிருந்தது. இதில் யாரும் எதிர்பாராத வகையில் பூஜா வெளியேறி இருக்கிறார். இவர் தான் குறைவான மதிப்பெண்களை பெற்று வெளியேறி இருக்கிறார்.
பூஜா குறித்த தகவல் :
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தான் பூஜா மக்கள் மத்தியில் பிரபலமானார். குறிப்பாக, பூஜா- டிஜே பிளாக் காம்பினேஷன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதற்குப் பின் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து நன்றாக சமைத்து இருந்தார். இருப்பினும் எதிர்பாராத வகையில் குறைவான மதிப்பெண்களை பெற்றதால், நேற்று இவர் எலிமினேட் செய்யப்பட்டிருக்கிறார். இது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்திருக்கிறது.