சன் டிவியாவது பரவாயில்ல 'மாஸ்டர் செஃப்' தான் காப்பி அடிச்சாங்க - இந்த சேனல் அப்படியே குக்கு வித் கோமாளிய காப்பி அடிச்சிடாங்க - ப்ரோமோ இதோ.

By Rajkumar · 27/3/2021

தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்துமே TRP மதிப்பீடு என்ற ஒரு விடயத்தை வைத்து தான் தங்களின் தொலைக்காட்சி தரத்தை முடிவு செய்து வருகிறது.அந்த வகையில் பல்வேறு தொலைக்காட்சிகளும் தங்களுடைய TRP தரத்தை நிலைநாட்டிக்கொள்ள பல்வேறு வித்யாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ்,கலர்ஸ் என்று பல்வேறு தொலைக்காட்சியின் அச்சாரமாக விளங்கி வருவது சீரியல்கல் மட்டும் தான். அதில் ஒரு சில தொலைக்காட்சியில் வரும் ஒரு சில நிகழ்ச்சிகள், டிவியின் TRP அளவை எகிற வைக்கிறது.

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான 'குக்கூ வித் கோமாளி' நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது.

இதையும் பாருங்க : அட, சூர்யாவின் '7ஆம் அறிவு' படத்திலேயே அபர்ணா நடிச்சிருக்காரா ? வைரலாகும் புகைப்படம்.

அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது. இதேநாள் பல்வேறு சேனல்களும் இதே நிகழ்ச்சியை காப்பி அடித்து வருகின்றது. இதே நிகழ்ச்சியை கன்னடத்தில் 'குக்கு வித் கிறுக்கு' என்ற ஆரம்பித்துள்ளனர். அதே போல சன் டிவியும் 'மாஸ்டர் செஃப்' என்ற புதிய சமையல் நிகழ்ச்சியை துவங்க இருக்கிறது.

https://twitter.com/sivakubendiran/status/1375443335788163077

சன் டிவியாவது 'மாஸ்டர் செஃப்' என்கிற சர்வதேச நிகழ்ச்சியை தான் காப்பி அடித்து புதிய நிகழ்ச்சியை துவங்கினார்கள். ஆனால், சர்வதேச சேனலான டிஸ்கவரி சேனல் அப்படியே குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியை காப்பி அடித்து 'சுவை' என்ற புதிய நிகழ்ச்சியை ஆரம்பிக்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பிரபல சன் மியூசிக் தொகுப்பாளராக அறியப்பட்ட ஆனந்த கண்ணன் 7 ஆண்டுகள் கழித்து தொகுப்பாளராக களமிறங்க இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full