முதல் பட விழாவில் ஓவராக பேசி மீம் மெட்டீரியலாக மாறிய அஸ்வின் - வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

By Rajkumar · 7/12/2021

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது.அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான 'குக்கூ வித் கோமாளி' நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசன் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமில்லாத பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் அஸ்வினும் ஒருவர். இந்த சீசனில் பலரது பெண்கள் மனதையும் கவர்ந்தவர் அஸ்வின் தான்.

https://twitter.com/Devinithya4/status/1467617042006102019

அஸ்வின், விஜய் டீவிக்கு புதிதானவர் அல்ல, இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, நினைக்கத் தெரிந்த மனமே போன்ற சீரியலில் நடித்துளளார். அதே போல ஓ காதல் கண்மணி, ஆதித்ய வர்மா போன்ற படங்களில் சிறு ரோலில் நடித்து இருக்கிறார். இவர் செல்லமே என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்தார். ஆனால், பெரிய அளவிற்கு அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. பின் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

ஆனால், இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோவாக வர வேண்டும் என்பது தான் ஆசை. குக் வித் கோமாளி சீசன் 2 என்ற நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் அஸ்வின். அதனை தொடர்ந்து இவர் ஆல்பம் சாங், வெப் சீரிஸ் என்று நடித்து வருகிறார். மேலும், தற்போது அஸ்வின் அவர்கள் 'என்ன சொல்லப்போகிறாய்' என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

https://twitter.com/uruttuhater/status/1467449793697832961

இயக்குனர் ஹரிஹரன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். மேலும், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்கள். இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. குக் வித் கோமாளி புகழின் காமெடியும், அஸ்வினின் காதல் காட்சிகளும் ட்ரெய்லரில் அட்டகாசமாக வந்திருக்கிறது. அதோடு படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக வரவேற்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அஸ்வின் பேசியது நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்பட்டு வருகிறது. இந்த விழாவில் பேசிய அவர், னக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்குங்க. கதை பிடிக்கவில்லை என்றால் நான் தூங்கிவிடுவேன். இதுவரை நான் கேட்ட 40 கதைகளில் நான் தூங்கி விட்டேன். ஆனால், நான் தூங்காத ஒரு கதை தான் என்ன சொல்ல போகிறாய். அந்த கதை பிடித்துப்போய் நான் நடிக்க ஓகே சொல்லிவிட்டேன்.

மேலும், கதை, தயாரிப்பாளர், மியூசிக் என்று ஏனோ தானோ இல்லாமல் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து இருக்கிறோம். ஏன் என்றால் நான் நிறைய பார்த்துவிட்டேன். ஏதோ படம் கொடுக்க வேண்டும் என்று இல்லாமல் எல்லா கோணத்திலும் யோசித்து தான் செய்து இருக்கிறோம். இதில் என்னுடைய உழைப்பு மட்டும் இல்ல எல்லாருடைய உழைப்பும் இருக்கிறது. அஸ்வின் பேசியது சமூக வளைத்ததில் பெரும் கேலிக்கு உள்ளாகி இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full