குக்கு வித் கோமாளி Confusion Room-ல் பேசியது இந்த KPY பிரபலம் தானா ? இவரால தான் போன வாரம் பிரச்சனையே.

By Rajkumar · 18/3/2021

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எத்தனையோ ரியாலிட்டி நிகழ்ச்சிகள் சர்ச்சைகளில் சிக்காமல் இருந்தது இல்லை. சூப்பர் சிங்கர் துவங்கி பிக் பாஸ் வரை பல நிகழ்ச்சிகள் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் உருவக் கேலி அதிகம் இடம்பெறுகிறது என்று கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சர்ச்சை எழுந்த்து. அதே போல ஜெகன் நடத்திய கனக்ஷன் நிகழ்ச்சியில் கூட டபுள் மீனிங் வார்த்தைகள், பாடி ஷேமிங் போன்றவை இருந்ததாக சர்ச்சைகள் எழுந்த்து. இதில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

https://twitter.com/TamilMixerTroll/status/1371026035920101376

ஆனால், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் துவங்கப்பட்ட குக்கு வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சிக்கு மக்களிடத்தில் பெரும் ஆதரவு கிடைத்தது. இந்த ஒரு நிகழ்ச்சி மட்டும் தான் எந்த வித சர்ச்சைகளில் சிக்காமல் ஒழுங்காக சென்று கொண்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியும் இப்போது புதிய ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதாவது நேற்றய நிகழ்ச்சியில் கோமாளிகள் கன்புயூஷன் அறைக்கு அனுப்ப்பட்டனர்.

இதில் ஒவ்வொரு கோமாளிகளும் உள்ளே சென்று அங்கே கூறப்படும் சமையல் குறிப்புகளை எழுதி வந்து தனது சமையல் பார்ட்னர்களுக்கு தெரிவித்தனர். அப்படி புகழ் உள்ளே சென்ற போது கன்புயூஷன் ரூமில் பேசிய அந்த நபர், புகழ் முகத்தை சிரிச்ச மாதிரி வையுங்க சிரித்தால் நீங்கள் அவ்வளவு க்யூட்டாக இருக்கிறீர்கள் ஆம்பளைங்களுக்கு உங்களை லவ் பண்ணனும் தோன்றும் என்று அவர் கூற BMG -ல் வடிவேலு வாய்ஸ் ஓவரில் 'அவனா நீ' என்ற வசனம் ஒலித்தது.

https://www.youtube.com/watch?v=kqceErtxkPs

இந்த வீடியோவை பார்த்த பலர், இந்த நிகழ்ச்சியிலும் Body Shaming இல்லாமல் இருந்தது இப்போது இதிலும் இப்படியா என்று விமர்சித்தனர். இதனால டிவியில் இந்த காட்சி ஒளிபரப்பப்படவில்லை. இப்படி ஒரு நிலையில் குக்கு வித் கோமாளியில் இந்த சர்ச்சைக்கு காரணமாக இருந்த அந்த கன்புயூஷன் அறையில் பேசியது வேறு யாரும் இல்லை KPY புகழ் குரேஷி தான். ஏற்கனவே இவர் குக்கு வித் கோமாளியில் ஒரு எபிசோடில் பங்கேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full