உலகமே கொரோனாவின் சீற்றத்தால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து விதமான படப்பிடிப்புகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் திரைத்துறையினர் வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் சினிமா துறையினர் பலரும் வேறு தொழில்களுக்கு மாறி வருகிறார்கள்.

Advertisement

இந்தி நடிகர் சோலங்கி திவாகர் பழ வியாபாரம் செய்யும் புகைப்படம் சமீபத்தில் தான் வைரலானது. அவ்வளவு ஏன் பிரபல தமிழ் இயக்குனர் ஆனந்த் அவர்க்ள சென்னை முகலிவாக்கத்தில் மளிகை கடை ஒன்றைதிறந்திருந்தார் . இவர் ஒரு மழை நான்கு சாரல், மவுன மழை, பாரதிபுரம், நானும் ஒரு பேய் தான் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். கொரோனா ஊரடங்குக்கு முன்பு தான் இவர் துணிந்து செய் என்ற படத்தை இயக்கி வந்தார்.

இந்த நிலையில் கொரோனா பிரச்சனையால் சீரியல் நடிகர் சாய் சக்தி எதிர்கொண்ட பிரச்சனை குறித்து மனம் திறந்துள்ளார். சீரியல் ஷூட்டிங் தொடங்கிட்டாலும், என்னை மாதிரி சைடு கேரக்டர்களையெல்லாம் இப்போதைக்கு கூப்பிட வாய்ப்பே இல்லை. ரியாலிட்டி ஷோ ஷூட்டிங்லயும் இதே கட்டுப்பாடுதான். ஈவென்ட் போய் மூணு மாசமாச்சு. நிறைய ஈவென்ட் கேன்சலாகிடுச்சு.

Advertisement

இப்போதைக்கு எனக்குத் தெரிஞ்ச ஒரே தீர்வு செலவைக் குறைக்கணும். குறைக்கத் தொடங்கிட்டேன். கையில கொஞ்சம் இருக்கிற காசை எண்ணி எண்ணித்தான் செலவு செய்றேன். சாப்பாட்டுக்கு ரேஷன்ல தர்ற அரிசியை வாங்கிப் பொங்கச் சொல்லிட்டேன். இப்ப பழகிட்டா, நாளைக்கு கையில காசு வந்தாக்கூட செலவழிக்கத் தோணாதில்லையா என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement