தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட chef தாமு - அப்படியே தாமு மாதிரியே இருக்காங்க.

By ·

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான 'குக்கூ வித் கோமாளி' நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது.

சொல்லப்போனால் சமீபத்தில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த பிக் பாஸ் 4நிகழ்ச்சியை விட இந்த ஷோவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை.இந்த சீஸனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் குக்காக கலந்து கொண்டு உள்ளனர். அதே போல இந்த சீசனில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, சக்தி, பார்வதி, மணிமேகலை, ஷிவாங்கி என்று பலர் கலந்து கொண்ட நிலையில் போட்டியாளராக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா என்று 8 பேர் கலந்து கொண்டனர்.

இதையும் பாருங்க : அட, சுந்தரி சீரியல் நடிகைக்கு கல்யாணம் ஆகிடுச்சா. அதுவும் காதல் கல்யாணமாம்.

இதில் மதுரை முத்து, தீபா, தர்ஷா குப்தா ரித்திகா, பவித்ரா ஆகியோர் வெளியேறிய நிலையில் கனி, பாபா பாஸ்கர், , அஸ்வின் ஆகிய 3 பேர் பைனலுக்கு சென்றனர். கடந்த வாரம் நடைபெற்ற வைல்டு கார்ட் சுற்றின் மூலம் ஷகீலா மற்றும் பவித்ரா ஆகியோரும் இறுதி சுற்றுக்கு தகுதிபெற்றனர். இதன் மூலம் கனி, பாபா பாஸ்கர், , அஸ்வின், ஷகீலா, பவித்ரா ஆகிய 5 பேர் இறுதி போட்டியில் மோத இருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கோமாளிக்கு இணையாக காமெடி செய்து வருகிறார்கள் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்து வரும் வெங்கடேஷ் பத் மற்றும் தாமு என்று அழைக்கப்படும் தாமோதரன். இதில் தாமோதரன் பல்வேறு சமயல் நிகழ்சகளை செய்து பிரபலமானவர் தான். தாமுவிற்கு அக்ஷ்யா என்ற மகள் இருக்கிறார். சமீபத்தில் தாமு தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full