ப்பா, தாமுவா இது ? இளம் வயதில் எவ்ளோ ஸ்லிம்மா இருந்திருக்கார் பாருங்க. வைரலாகும் புகைப்படம்.

By Rajkumar · 4/7/2021

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான 'குக்கூ வித் கோமாளி' நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பானது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் இருந்தது.

சொல்லப்போனால் பிக் பாஸ் 4நிகழ்ச்சியை விட இந்த ஷோவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்தது என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை. இந்த சீஸனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் குக்காக கலந்து கொண்டுஇருந்தனர். அதே போல இந்த சீசனில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, சக்தி, பார்வதி, மணிமேகலை, ஷிவாங்கி என்று பலர் கலந்து கொண்ட நிலையில் போட்டியாளராக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா என்று 8 பேர் கலந்து கொண்டனர்.

இதையும் பாருங்க : பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து தீடீரென்று விலகிய ஜெனி - அவருக்கு பதில் நடிக்க வந்த பிக் பாஸ் நடிகை.

கடந்த சில வாரங்களுக்கு முன் குக் வித் கோமாளியின் பைனல் படப்பிடிப்பு நடந்து முடிந்து. இறுதி போட்டிக்கு பாபா பாஸ்கர், கனி, அஸ்வின், ஷகீலா, பவித்ரா ஆகிய 5 பேர் தகுதி பெற்று இருந்த நிலையில் இறுதி போட்டியில் சிறப்பு விருந்தினராக சிம்பு வந்திருந்தார்.இந்த சீசனில் யார் வெற்றிபெறுவார்கள் என்று மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இந்த சீசனில் கனி முதல் இடத்தையும், ஷகீலா இரண்டாம் இடத்தையும், அஷ்வின் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கோமாளிக்கு இணையாக காமெடி செய்து வந்தனர் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்து வந்த வெங்கடேஷ் பத் மற்றும் தாமு என்று அழைக்கப்படும் தாமோதரன். இதில் தாமோதரன் பல்வேறு சமயல் நிகழ்சகளை செய்து பிரபலமானவர் தான். தாமுவிற்கு அக்ஷ்யா என்ற மகள் இருக்கிறார். சமீபத்தில் தாமு தனது மகளுடன் இருக்கும் இளம் வயது புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full