அட, 10 ஆண்டுகளுக்கு முன்னரே விஜேவாக பணியாற்றியுள்ள கனி - எந்த சேனல் தெரியமா ? இதோ வீடியோ.

By Rajkumar · 21/3/2021

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான 'குக்கூ வித் கோமாளி' நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது.

இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆனால், இந்த சீசனில் கலந்து கொண்டுள்ள கனி தான் ரசிகர்ளுக்கு பரிட்சியமில்லாத ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர். ஆனால், இவரும் மிகப்பெரிய சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்த பெண் தான்.இவருடைய உண்மையான பெயர் கார்த்திக்காக. இவர் பிரபல இயக்குனரான அகதியனின் மகளாவார்.இவரது இரண்டு சகதரிகளும் நடிகைகள் தான். அதில் ஒருவர் சென்னை 28, அஞ்சாதே போன்ற படங்களில் நடித்தவரும் பிக் பாஸ் 2 போட்டியாளருமான விஜயலக்ஷ்மி.

மற்றொருவரான நிரஞ்சனி, இவர் துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் ரக்ஷனுக்கு ஜோடியாக நடித்தவர். மேலும், இவரது கணவர் திரு, தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களை இயக்கியவர். மேலும், இந்த தம்பதியருக்கு இரண்டு மகள்களும் இருக்கின்றனர். அதே போல கனி, ஆடை வடிவமைப்பாளராக இருந்து வருகிறார். அதே போல இவர் இதற்க்கு முன்பாகவே 10 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சொல் விளையாட்டு ' என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

https://www.youtube.com/watch?v=IAF7nMC_oEM

இது ஒருபுறம் இருக்க குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் செமி பைனலுக்கான போட்டி படு மும்மரமாக நடந்தது. இந்த செமி பைனல் சுற்றில் கனி, பாபா பாஸ்கர், ஷகீலா, அஸ்வின் ஆகிய 4 பேர் பங்கேற்றனர், இதில் 3 பேர் மட்டும் தான் பைனலுக்கு செல்ல முடியும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் யார் இந்த வாரம் வெளியேறுவார் என்று கடும் போட்டி நிலவியது. நேற்று நடைபெற்ற டாஸ்கில் கனி, இம்யூனிடி பேண்டை வென்றார். இன்று நடைபெற்ற முதல் டாஸ்கில் கனி மற்றும் அஸ்வின் முதல் இரண்டு நபராக பைனலுக்கு நுழைந்த நிலையில் பாபா பாஸ்கர் மற்றும் ஷகீலா, எலிமினேஷன் குக் ஆப் சாலஞ்ஜில் சந்தித்தனர். இதில் பாபா பாஸ்கர் சிறப்பாக சமைத்து இறுதி சுற்றுக்கு மூன்றாவது போட்டியாளராக உள்ளே நுழைந்தார். எனவே, ஷகீலா இந்த வாரம் வெளியேறினார்.

behindtalkies AMP · Quick view
View full