எழ கூட முடியல, ரொம்ப லோவா இருக்கு - காலில் மிகப்பெரிய கட்டுடன் மணிமேகலை. ரசிகர்கள் ஆறுதல்

By Arun · 9/10/2023

படுத்த படுக்கையாக மணிமேகலை இருக்கும் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சன் மியூசிக்கில் பிரபலமான வி.ஜே வாக வேலை பார்த்து இருந்தவர் மணிமேகலை. அதன் பின் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இதனை தொடர்ந்து இவர் தனியார் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆனார். பின் இவர் மக்கள் மத்தியில் பிரபலமான தொகுப்பாளினியாக மணிமேகலை ஆனார்.

இதனால் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. இதனிடையே மணிமேகலை- உசேன் என்பவரை நீண்ட வருடமாக காதலித்து வந்தார்கள். ஆனால், இவர்கள் காதலுக்கு இருவீட்டாரும் ஒத்து கொள்ளவில்லை. இதனால் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி இருவரும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள். மணிமேகலை திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.

மணிமேகலை குறித்த தகவல்:

மேலும், இரண்டு குடும்பத்தினரின் எந்த ஒரு ஆதரவும் இல்லாமல் தங்களின் வாழ்க்கை துவங்கிய உசேன் மற்றும் மணிமேகலை படிப்படியாக முன்னேறி இன்று சொந்தமாக நிலம், கார் வாங்கி என்று சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இருவருமே திருமணத்திற்கு பின்னர் யூடியூப் சேனல் ஒன்றை துவங்கியிருந்தார்கள். அதில் இவர்கள் பதிவிடும் எதார்த்தமான வீடியோக்கள் பார்வையாளர்களை கவர, இவர்களது யூடியூப் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

View this post on Instagram

A post shared by Mani Megalai (@iammanimegalai)

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை:

அதோடு சின்னத்திரையில் பல ஆண்டுகளாக காணாமல் போன மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் தான் இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடித்தார். மூன்று சீசன்களாக இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக மணிமேகலை இருந்தார். பின் நான்காவது சீசன் தொடங்கும் போது இவர் நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக அறிவித்தார். இது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. பின் இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

மணிமேகலை கனவு இல்லம்:

தற்போது மணிமேகலை-உசேன் இருவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்கள். அதோடு மணிமேகலை தன் கணவருடன் சேர்ந்து தங்களுடைய கனவு இல்லத்தை கட்டிக்கொண்டு வருகிறார்கள். அதற்கான புகைப்படங்களையும் இவர்கள் அடிக்கடி சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் மணிமேகலை படுத்த படுக்கையாக இருக்கும் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மணிமேகலை போஸ்ட்:

அதாவது மணிமேகலை அவர்கள் சமீபத்தில் தரையில் வழுக்கி கீழே விழுந்திருக்கிறார். இதனால் அவருடைய காலில் பலமாக அடிபட்டு இருக்கிறது. மேலும், இது தொடர்பான புகைப்படத்தை தான் மணிமேகலை தன்னோட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவாக கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full