மூன்று ஆண்டுகள் கழித்து குடும்பத்தாருடன் இணைந்த மணிமேகலை - இன்னும் இவரு மட்டும் சமாதானம் ஆகலயாம்.

By Rajkumar · 18/1/2021

திருமணமாகி மூன்று ஆண்டுகள் கழித்து தனது குடும்பத்தாருடன் இணைந்து இருக்கிறார் மணிமேகலை. சன் மியூசிக்கில் பிரபலமான வி.ஜே வாக இருந்தவர் மணிமேகலை. பின்னர் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பானியாகவும் அறிமுகம் ஆனார். பின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மணிமேகலை மக்களிடையே பிரபலமான தொகுப்பாளினியாக ஆனார். அதுமட்டும் இல்லாமல் இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உள்ளது. மணிமேகலை அவர்கள் உசேன் என்பவரை காதலித்து வந்தார்.

மணிமேகலை பெற்றோர் மற்றும் சகோதரர்கள் இவர்களுடைய காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பின் இவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து திருமணம் செய்து கொண்டார்கள். ஹுஷைன், மணிமேகலை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்கள் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள். மணிமேகலை திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார். மேலும், இன்னும் தனது பெற்றோர்கள் தங்களை ஏற்றுக்கொள்ளாததால் கொஞ்சம் கவலையில் இருந்து வந்தார் மணிமேகலை.

இதையும் பாருங்க : ஆரி முதல் ஆஜீத் வரை பிக் பாஸ் சம்பளம் விவரம் - 10000 ஆயிரம் கூட வாங்கி இருகாங்க.

இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார்கள். சமீபத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை கோமாளியாக பங்கு பெற்றார். தற்போது குக்கு வித் கோமாளி சீசன் 2விலும் கோமாளியாக பங்குபெற்று வருகிறார் மணிமேகலை.

இப்படி ஒரு நிலையில் திருமணமாகி மூன்று ஆண்டுகள் கழித்து தனது குடும்பத்தாருடன் இணைந்துள்ளார் மணிமேகலை. சமீபத்தில் தனது அம்மா மற்றும் தம்பியுடன் பொங்கல் கொண்டத்தை கொண்டாடிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனால், மணிமேகலை அப்பா மட்டும் இன்னும் சமாதானம் ஆகவில்லையாம்.

behindtalkies AMP · Quick view
View full