10வது படிக்கற வரைக்கும் அழுதுனே போவேன்.தான் படித்த பள்ளியின் புகைப்படத்தை பதிவிட்ட புகைப்படம்.

By Rajkumar · 7/4/2020

சன் மியூசிக்கில் பிரபலமான வி.ஜே வாக இருந்தவர் மணிமேகலை. பின்னர் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பானியாகவும் அறிமுகம் ஆனார். பின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மணிமேகலை மக்களிடையே பிரபலமான தொகுப்பாளினியாக ஆனார். அதுமட்டும் இல்லாமல் இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உள்ளது. மணிமேகலை அவர்கள் உசேன் என்பவரை காதலித்து வந்தார்.

மணிமேகலை பெற்றோர் மற்றும் சகோதரர்கள் இவர்களுடைய காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பின் இவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து திருமணம் செய்து கொண்டார்கள். ஹுஷைன், மணிமேகலை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்கள் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள். மணிமேகலை திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.மேலும், இன்னும் தனது பெற்றோர்கள் தங்களை ஏற்றுக்கொள்ளாததால் கொஞ்சம் கவலையில் இருக்கிறார் மணிமேகலை.

இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார்கள். சமீபத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை கோமாளியாக பங்கு பெற்றார். எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார் மணிமேகலை.

https://www.instagram.com/p/B-pMTAin106/

மேலும், இவரது பதிவுக்கு பல ரசிகர்களும் இருக்கின்றனர். அதற்கு காரணம் இவர் பதிவிடும் பதிவுகள் மிகவும் வேடிக்கையாகவும் குயூடாகவும் இருக்கும். அதிலும் இவரது கணவருடன் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் ஏராளம். தற்போது கொரோனா வைரஸ் ஊரடங்கள் கிராமத்தில் இருந்து வருகிறார் மணிமேகலை.

இருப்பினும் அடிக்கடி புகைப்படங்களையும் விடீயோக்களையும் பதிவிட்டு அடிக்கடி தனது ரசிகர்களை பொழுதுபோக்கி வருகிறார். இந்த நிலையில் தான் எல் ஜி முதல் 1 ஆம் வகுப்பு வரை படித்த தனது பள்ளியின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மணிமேகலை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full