எல்லா எடத்தலையும் கேள்வி கேட்டு அவமானமா இருக்கு. வீடீயோவை பகிர்ந்து புலம்பிய மணிமேகலை.

By Rajkumar · 22/2/2020

சன் மியூசிக்கில் பிரபலமான வி.ஜே வாக இருந்தவர் மணிமேகலை. பின்னர் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பானியாகவும் அறிமுகம் ஆனார். பின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மணிமேகலை மக்களிடையே பிரபலமான தொகுப்பாளினியாக ஆனார். அதுமட்டும் இல்லாமல் இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உள்ளது. மணிமேகலை அவர்கள் உசேன் என்பவரை காதலித்து வந்தார்.

https://twitter.com/iamManimegalai/status/1230872709996982273

மணிமேகலை பெற்றோர் மற்றும் சகோதரர்கள் இவர்களுடைய காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பின் இவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து திருமணம் செய்து கொண்டார்கள். ஹுஷைன், மணிமேகலை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்கள் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள். மணிமேகலை திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.மேலும், இன்னும் தனது பெற்றோர்கள் தங்களை ஏற்றுக்கொள்ளாததால் கொஞ்சம் கவலையில் இருக்கிறார் மணிமேகலை.

இதையும் பாருங்க :சுருக்கு போட்ட உடையில் ரசிகர்களை கிறுக்கு பிடிக்க வைக்கும் ரைசாவின் புகைப்படம்.

எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மணிமேகலை சமீபத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், மணிமேகலை வீட்டில் குக்கர் வெடித்தது குறித்து கலாய்த்து இருந்தனர். அதனை பகிர்ந்துள்ள மணிமேகலை, ஒரு கெஸ்டா நாலு இடத்துக்கு போக முடியாத எல்லா இடத்திலேயும் கேள்வி கேட்டு ஒரே அவமானமா இருக்கு, ஒரு மட்டு மரியாதை இல்ல, எல்லாம் அந்த ஒரு குக்கரால வந்தது என்று பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/B8tQx7xnaA6/

சமீபத்தில் ணிமேகலை வீட்டில் குக்கர் வெடித்து சிதறி சமையலறையே அலங்கோலமாக உள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இது குறித்து அந்த வீடியோவில் மணிமேகலை கூறியிருப்பது, எங்கள் வீட்டில் இன்று சமைக்காரர் வரவில்லை. அதனால் உடலுக்கு ஆரோக்கியமாக நாமே சமைக்கலாம் என்று முடிவு செய்தேன். இரண்டு டம்ளர் அரிசிக்கு நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை வைத்தேன். குக்கர் எப்படி வெடிச்சது என்று எனக்கு தெரியல? எனக்கு இப்ப தெரிஞ்சாகணும், என்ன பாத்தா உனக்கு எப்படி தெரியுது? நமக்கு வராத விஷயத்தையும் ட்ரைப் பண்ணி நான் பண்ணி இருக்கேன். ஆனால், இந்த குக்கருக்கு என்ன தெரியம்.

ஐயோ, நான் குக்கர் கிட்ட மட்டும் இருந்தா என்ன ஆகி இருக்கும். இந்த மாதிரி நேரத்துல எனக்கு உதவி பண்ணாம வீடியோ எடுக்கிற இந்த உசேன் மாதிரி ஆளுங்கள வச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது. அட்லீஸ்ட் ஒரு வருடத்துக்கு சமையல் பக்கமே போகவே கூடாது. வீடு புள்ள கிளீன் பண்ணறது கூட எனக்கு கஷ்டமா இல்ல. நான் மேக்கப் இல்லாம இருக்கும் போது வீடியோவ எடுக்கிறது தான் மனசுக்கு வருத்தமா இருக்கு என்று கூறியிருந்தார்.

behindtalkies AMP · Quick view
View full