விருது விழாவில் கலங்கிய முன்னாள் CWC கோமாளி மோனிஷா. சன் டிவிக்கு போனதும் கிடைத்த முதல் விருது

By subhashini · 9/5/2024

விருது விழாவில் எமோஷனலாக குக் வித் கோமாளி மோனிஷா பிளசி பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நான்கு சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் இருக்கிறது. அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனையில் மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் இந்த சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசன் ஒளிபரப்ப தொடங்கி விட்டனர்.

குக் வித் கோமாளி மோனிஷா:

மேலும், கடந்த சீசனில் பல புதிய கோமாளிகள் கலந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் மோனிஷாவும் ஒருவர். இவர் kpy நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர். பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று இருந்தார். கடந்த சீசனில் சிறந்த கோமாளி என்ற பட்டத்தை மோனிஷா வாங்கி இருந்தார். இதனை அடுத்து இவர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

https://www.youtube.com/watch?v=8YKnk3wVTv8

மோனிஷா குறித்த தகவல்:

அதன் பின் மோனிஷா அவர்கள் எம்எஸ்சி எலக்ட்ரானிக் மீடியா படிப்பு முடித்திருக்கிறார். சென்னை பல்கலைக்கழகத்தில் இவர் தான் முதல் ரேங்க் எடுத்திருக்கிறார். இதனால் இவருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களின் கையால் பட்டம் வாங்கி இருக்கிறார். பலருமே அவருக்கு பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் டாப்பு குக்கு டுப்பு குக்கு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்.

மோனிஷா வாங்கிய விருது:

இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் நடத்த இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் மோனிஷா சில படங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆனந்தன் விகடன் நடத்திய நம்பிக்கை விருதுகள் 2023 விழா சமீபத்தில் நடந்த பெற்றது. இதில் டாப் 10 இளைஞர்களுக்கான விருதை மோனிஷா ஃபிளப்ஸிக்கு கிடைத்திருக்கிறது. விருதை வாங்கிய பிறகு மேடையில் மோனிஷா பிளசி, என்னை நம்பி வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி.

View this post on Instagram

A post shared by Media Masons (@mediamasons)

மேடையில் மோனிஷா சொன்னது:

குறிப்பாக, என்னுடைய அப்பா அம்மாவுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இருவருமே எனக்கு ரொம்ப சப்போர்ட்டாக இருக்கிறார்கள். என் வாழ்க்கையில் நான் நிறைய தோற்றுப் போய் இருக்கிறேன். அந்த சமயத்தில் எனக்கு அவர்கள் தான் ஆதரவாக இருந்திருக்கிறார்கள். மாவீரன் மாதிரி ஒரு படத்தில் நடித்த வாய்ப்பு கிடைக்கணும் என்றால் நான் ஒரு பத்து வருடம் உழைக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், அந்த படத்தில் ஆடிசனுக்கு சென்றபோது எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஒரு கனவு மாதிரி இருக்கிறது. சிவகார்த்திகேயன் அண்ணா, சரிதா மேடம் உடன் பணியாற்றியது என் வாழ்நாள் முழுவதுமே மறக்க முடியாது என்று ரொம்ப எமோஷனலாக பேசியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full