உடல் எடையை குறைக்க என்ன மாதிரி பண்ணாதீங்க - ரசிகர்களுக்கு பவித்ரா கொடுத்த அட்வைஸ். இவருக்கு இவ்ளோ பிரச்சனையா ?

By Rajkumar · 20/8/2022

உடல் எடை குறைந்தது ஏன் என்று குக்கு வித் கோமாளி புகழ் பவித்ரா கூறி இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான 'குக்கூ வித் கோமாளி' நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. இறுதி போட்டிக்கு பாபா பாஸ்கர், கனி, அஸ்வின், ஷகீலா, பவித்ரா ஆகிய 5 பேர் தகுதி பெற்று இருந்தனர்.

இந்த சீசனில் கனி முதல் இடத்தையும், ஷகீலா இரண்டாம் இடத்தையும், அஷ்வின் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த சீஸனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் குக்காக கலந்து கொண்டு இருந்தனர். அதில் பவித்ரா லட்சுமியும் ஒருவர்.நடிகை பவித்ரா லட்சுமி ஆரம்பத்தில் குறும்படம் மூலமாக மீடியா துறைக்கு அறிமுகமானார். மேலும் மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

சின்னத்திரை சமந்தா :

இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.அதுமட்டுமல்லாமல் இவர் இரட்டை வால் குருவி என்ற சீரியலிலும் நடித்து இருக்கிறார்.பவித்ரா லட்சுமியை பலரும் சமந்தாவுடன் ஒப்பிட்டு வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட இவர் தெறி பட சமந்தாவை போல இருந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது.

குக்கு வித் கோமாளி மூலம் சினிமா வாய்ப்பு :

அதை வைத்து பலரும் பல விதமான மீம்களை ஷேர் செய்தனர். ஆனால், தன்னை பற்றி வந்த மீம்களை எல்லாம் பார்த்து கோபப்படாமல் படு ஜாலியாக எடுத்துக்கொண்டார் பவித்ரா. குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் ஒரு சில படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். ஆனால், எந்த படமும் இதுவரை வெளியாகவில்லை. சமீப காலமாக பவித்ரா,, முன்பு இருந்ததை விட உடல் எடை குறைத்து படு ஸ்லிம்மாக மாறி இருக்கிறார்.

உடல் எடையை குறைத்த பவித்ரா :

இப்படி ஒரு நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் 'நீங்கள் மிகவும் ஒல்லியாக இருக்கிறீர்கள்' என்று கமன்ட் செய்து இருந்தார். என்னுடைய உடல் எடை குறைந்தது குறித்து பல கேள்வி எழுந்து கொண்டிருக்கிறது. ஆம், நான் அதிக எடையை இழந்து விட்டேன். ஆனால், அதை நான் வேண்டுமென்றே செய்யவில்லை வேலை பளு காரணமாகவும் எனக்கு இருக்கும் சில தனிப்பட்ட வேலைகள் காரணமாகவும் என்னால் சரியாக தூங்க முடியவில்லை.

பவித்ராவின் அட்வைஸ் :

சரியான நேரத்தில் சாப்பிட முடியவில்லை. சூட்டிங் காரணமாக அதிகம் பயணம் செய்வதால் என்னால் உடற்பயிற்சிகளையும் செய்ய முடியவில்லை. இது கண்டிப்பாக ஆரோக்கியமான விஷயம் கிடையாது தான். ஆனால், விரைவில் நான் நல்ல உடல் மற்றும் மன பலத்துடன் வருவேன் என்று நம்புகிறேன். உடல் எடையை குறைப்பது எப்படி என்று என்னிடம் கேட்கும் பலருக்கும் நான் சொல்ல விரும்புவது. என்னை மட்டும் பின்பற்றாதீர்கள். தயவு செய்து ஒழுங்காக சாப்பிட்டு ஒழுங்காக தூங்கி சரியான நேரத்தில் வேலை செய்யுங்கள்' என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full