தன்னை சாப்பாடு விஷயத்தை வைத்து கேலி செய்த வனிதா, திருமண விஷயத்தை வைத்து பதிலடி கொடுத்த பிரியங்கா.

By Siva · 1/5/2024

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் நான்கு சீசன்களை கடந்து வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நான்கு சீசனும் ஒளிபரப்பாகி இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான்.

அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனைக்கு மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. கடந்த ஆண்டு தான் குக் வித் கோமாளியின் 4வது சீசன் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்து இருந்தது. இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட், தாமு தான் நடுவர்களாக இருந்தார்கள்.

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி:

இப்படி இருக்கும் நிலையில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து நடுவர் வெங்கடேஷ் பட், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நிறுவனம் Media Masons 10, நிகழ்ச்சியின் இயக்குனர் ஆகியோர் விலகி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. மேலும், இந்த நிகழ்ச்சியில் தாமுடன் மற்றொரு நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் களம் இறங்கி இருக்கிறார். இந்த சீசனில் புதிய கோமாளிகளாக ராமர், ஷப்பனம், அன்ஷிதா, kpy வினோத் ஆகியோர் இணைந்துள்ளனர்.

View this post on Instagram

A post shared by 😍_CookwithComali_Fun_😍 (@_cwc_fun_)

நிகழ்ச்சி குறித்த தகவல்:

அதே போல இந்த சீசனில் போட்டியாளர்களாக ஷெர்லின் சோயா, அக்ஷய் கமல், நடிகை திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சூப்பர் சிங்கர் பூஜா, ஃபுட் ரிவியூவர் இர்பான், பாண்டியன் பூஜா, சீரியல் நடிகர் வசந்த் வசி, தொகுப்பாளினி பிரியங்கா தேஷ் பாண்டே, விடிவி கணேஷ் மற்றும் சீரியல் நடிகை சுஜிதா ஆகியோர் போட்டியாளராக களமிறங்கி இருக்கின்றனர். இதில் ரசிகரகளுக்கு பரிட்சியமில்லாத சில போட்டியாளர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

நிகழ்ச்சி அப்டேட்:

மேலும், கடந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தான் இந்த நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கப்பட்டது. இரண்டாவது எபிசோடிலேயே குக்கிங் ஸ்டார்ட் ஆகிவிட்டது. இதில் செப்ஃ ஆப் தி வீக் பட்டத்தை சுஜிதா வென்றிருந்தார். இந்நிலையில் நடந்து முடிந்த எபிசோட்டில் வனிதா சிறப்பு விருந்தினராக குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். அப்போது அவர் பிரியங்காவை பார்த்து, யார் சமைத்தாலும் அது டேபிளுக்கு கொண்டுவரை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

View this post on Instagram

A post shared by vijay television (@vijaytv_galatta)

பிரியங்கா சாப்பிட்டு விடுவாள் என்று கிண்டல் அடித்து பேசி இருக்கிறார். இதனால் கடுப்பான பிரியங்கா, நீங்க எப்ப கல்யாண சோறு போடுவீங்க என்று பேசி இருக்கிறார். இதனால் மொக்க வாங்கிய வனிதா எதுவும் பேச முடியாமல் திக்குமுக்காடி நின்று இருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full