விவேக் இறுதி சடங்கில் கடுப்பான புகழ். வைரலாகும் வீடியோ. ( கடைக்கு சீல்வச்சது கண்னு முன்னாடி வந்து போவும்ல)

By Rajkumar · 17/4/2021

தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவான்களில் ஒருவராக திகழ்ந்து வந்த விவேக் இன்று (ஏப்ரல் 17 ) காலமாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் நடிகர் விவேக். நகைச்சுவையின் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விவேக்.நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் விவேக் லட்ச கணக்கான மரங்களை நட்டுள்ளார். இப்படி ஒரு நிலையில் நேற்று (ஏப்ரல் 16) நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

https://www.youtube.com/watch?v=Zl3q0nmOzhQ

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி இன்று காலை 4.35 மணி அளவில் காலமானார். விவேக்கின் மறைவிற்கு பல்வேரு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். அந்த வகையில் குக்கு வித் கோமாளி புகழும் நேரில் சென்று தன்னுடைய இரங்கலை தெரிவித்தார். புகழை கடந்தும் அங்கிருந்த ரசிகர்கள் அவருடன் செல்பி எடுக்க அலை மோதினர்.

இதனால் கடுப்பான புகழ், போட்டோ எடுத்துட்டு இருக்கீங்க, டெத்ல இருக்கோம். உங்களுக்கு எல்லாம் எப்படி மனசு வருது என்று கோபமாக சொல்லிக்கொண்டே நடந்து சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பிறவி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் புகழ் சமீபத்தில் கடை திறப்பு விழா ஒன்றிற்கு சென்று இருந்தார். புகழை கண்டதால் அங்கு கூடி இருந்த பலரும் அவருடன் செல்பி எடுத்தனர். அவர்களுக்கு எல்லாம் காரில் இருந்தபடி போஸ் கொடுதார் புகழ்.

https://www.youtube.com/watch?v=b9OndDVKpsM&t=2s

கொரோனா பரவல் அதிகரித்து கொண்டு இருக்கும் நிலையில் புகழை காண கூட்டம் கூடியதோடு அங்கே இருந்த பலரும் மாஸ்க் அணியாமலும் இருந்தனர். இதனை பார்த்த காவல் துறையினர் அங்கிருந்த கூட்டத்தை கலைக்க லேசான தடியடி நடத்தினர். அதே போல கட்டுப்பாடுகளை மீறியதாக புகழ் திறப்பு விழா செய்ய வந்த கடைக்கும் சீல் வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full