என்னை நிஜக் கோமாளியாவே நினைக்கிறாங்க - எதுக்கு சார் இப்படிப் பண்றாங்க? சமீபத்தில் நடந்த ஏமாற்றம் குறித்து கண் கலங்கிய புகழ்.

By Rajkumar · 6/3/2021

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு நிறைவடைந்த குக்கூ வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் சென்று கொண்டு இருக்கிறது. இந்த இரண்டு சீசனும் வெற்றி பெற முக்கிய காரணம் நிகழ்ச்சியில் இருக்கும் கோமாளிகள் தான். இவர்கள் செய்யும் கோமாளித்தனத்திற்கு அளவே இல்லை. அதோடு இந்த நிகழ்ச்சி இந்த அளவிற்கு சோசியல் மீடியாவில் வைரல் ஆனதற்கு முக்கிய காரணம் புகழ். மேலும், இந்த நிகழ்ச்சியை புகழுக்காகவே பார்க்கின்ற ஒரு கும்பலும் சோசியல் மீடியாவில் உள்ளது. தற்போது குக் வித் கோமாளியின் செலிபிரிட்டி ஆக சோசியல் மீடியாவில் பரவியிருப்பது நம்ம புகழ் தான்.

மேலும், இந்த நிகழ்ச்சியை புகழுக்காகவே பார்க்கின்ற ஒரு கும்பலும் சோசியல் மீடியாவில் உள்ளது. குக் வித் கோமாளி-யின் நாயகன் என்று சொல்லுமளவுக்கு காமெடி மழை பொழிந்து தள்ளுகிறார் புகழ். கடலூரை சேர்ந்த இவர் வெறும் ஐநூறு ரூபாயை வைத்துக்கொண்டு 2008ம் ஆண்டு சென்னைக்கு வேலை தேடி வந்திருக்கிறார் அப்போது இவரை வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி இருக்கிறார்கள் அதன் பின்னர் இவர் மேக்கானிக் கடையில் வேலை செய்து இருக்கிறார் பின்னர் வாட்டர் வாஷ் கடையில் கூட வேலை செய்து இருக்கிறார்.

இதையும் பாருங்க : சிவகார்த்திகேயன் சிபாரிசு செய்தும் Vip படத்தில் தம்பியாக நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுள்ள விஜய் டிவி சீரியல் நடிகர்.

அந்த சமயத்தில் இவருக்கு பானா காத்தாடி படத்தில் நடித்த உதயராஜ் உடன் நட்பு ஏற்பட்டு இருக்கிறது. அதன் பின்னர் கலக்கப்போவது யாரு சீசன் 6 நிகழ்ச்சியில் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். செட்டில் அனைவரிடமும் இவர் கலகலப்பாக பேசுவார் அதன்மூலம் இவருக்கு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. அப்படியே அது இது எது, சிரிச்சா போச்சு என்று பல நிகழ்ச்சி மூலம் தனது வித்தியாசமான கெட்டப்புகளில் போட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் புகழ்.

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற புகழ், பேசியுள்ளது 'குக்கு வித் கோமாளி' ஷோவுலதான் நான் கோமாளி. ஆனா, சிலர் என்னை நிஜக் கோமாளியாவே நினைக்கிறாங்க. அதுதான் ஏன்னு தெரியலை. ரெண்டு நாளுக்கு முன்னாடி ஷங்கர் சார் ஆபீஸ்ல இருந்து பேசறோம்னு ஒரு போன் வந்தது. கிண்டியில ஒரு இடத்துக்கு வர முடியுமான்னு கேட்டாங்க. நானும் நம்பி ஆசையா கிளம்பிப் போனேன். ஆனா கிண்டி போய் அந்த நம்பரைக் கூப்பிட்டா சுவிட்ச் ஆஃப் ஆகியிருக்கு. யாரு எதுக்கு சார் இப்படிப் பண்றாங்க?' என்று கண்கலங்க கூறி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full