பாலாஜியின் திருமண நாளில் அவரது புகைப்படம் முன்பு புகழ் வேண்டிய விஷயம் - பாலாஜி குடும்பத்திற்காக ரசிகர்கள் வைத்த கோரிக்கை.

By Rajkumar · 5/9/2022

கடந்த 2020 ஆம் ஆண்டு மேடை கலைஞரும் காமெடி நடிகருமான வடிவேலு பாலாஜி இறந்த சம்பவம் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது கலக்கப்போவது யாரு கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் காமெடியனாக தோன்றி ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்தவர் வடிவேலு பாலாஜி. . வடிவேல் பாலாஜி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு சீசன் 4 மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

அந்த சீசனில் வடிவேல் பாலாஜி பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.இவரது தனித்துவமே வடிவேலு ஸ்லாங்கும் அவரது பாடி லாங்குவேஜும் தான். வடிவேலு திரைப்படத்தில் பேசிய வசனங்கள் தான். வடிவேலுவை போல மிமிக்ரி செய்யும் மேடை கலைஞர்கள் ‘வேணா… வலிக்கிது, அழுதுருவேன் என்ற ஒரே வசனத்தை பேசி போர் அடிக்க வைத்த நிலையில் வடிவேல் பாலாஜி நாய் சேகர், வண்டு முருகன், சூனா பானா என வடிவேலுவின் அத்தனை மாடுலேஷனிலும் நடித்து அசத்தி இருந்தார்.

கதறி அழுத புகழ் :

இவரது பிரிவால் விஜய் டிவி விஜய் டிவி பிரபலங்கள் பலரையும் பாதித்தது., வடிவேலு பாலாஜியின் இறுதி அஞ்சலியில் விஜய் டிவி பிரபலங்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். Kpy புகழ், பாலாஜியின் உடலை பார்த்து. அதிலும் புகழ் 'எந்திரி மாமா வா போலாம். நீ தான எனக்கு அம்மா அப்பாவா இருந்த இனி எனக்கு யார் இருக்கா மாமா' என்று கதறி அழுது இருந்தார். இப்படி ஒரு நிலையில் புகழுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

மூன்று முறை திருமணம் செய்த புகழ் :

மேலும், இவர்களின் திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருக்கமான உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டு இருந்தனர். புகழ் மற்றும் பென்சி ஆகிய கடந்த ஆண்டே தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளராக ராமகிருஷ்ணன் என்பவரின் தலைமையில் புகழ் - பென்சி இருவரும் சுயமரியாதை முறைப்படி ரெஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். தற்போது இவர்கள் சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட போது எடுத்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.

புகழ் கொடுத்த விளக்கம் :

ஒருபுறம் சுயமரியாதைத் திருமணம், இன்னொரு பக்கம் கோயிலில் திருமணமா’ என சிலர் விமர்சனம் செய்து வரும் நிலையில் இதற்கு பதிலடி கொடுத்த புகழ் 'ஏற்கனவே சுயமரியாதை முறையில் திருமணம் மற்றும் இந்து முறை திருமணம் முடித்துள்ள புகழ், இஸ்லாம் முறைப்படியும் திருமணம் முடித்த புகைப்படத்தை பதிவிட்டு 'என் தந்தையின் அன்பிற்காக ஒரு முறை. தாய் அன்பிற்காக ஒருமுறை. என் மனைவி குடும்பத்தார் அன்பிற்கு ஒரு முறை (பென்சியா இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்) என் மீது அன்பு செலுத்தும் வேறு எந்த அன்பு உள்ளங்களாவது ஆசைப்பட்டால் அவர்களூக்காக இன்னொரு முறையும் தயார்' என்று குறிப்பிட்டு இருந்தார்.

பாலாஜியின் திருமண நாளில் புகழ் வேண்டிய விஷயம் :

இந்த நிலையில் வடிவேல் பாலாஜியின் திருமண நாளில் புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அவரது வீட்டில் இருக்கும் வடிவேல் பாலாஜியின் புகைப்படத்திற்கு முன் ஆசீவர்வாதம் வாங்கும் புகழ் 'இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் மாமா...உங்கள் திருமண நாள் அன்று என் வாழ்க்கை பயணத்துல அடுத்த கட்டத்துல அடியெடுத்து வைக்கிறேன். உங்க ஆசிர்வாதம் எப்பவும் எங்க ரெண்டு பேருக்கும் இருக்கும்னு நம்பறேன்.எப்பவும் என் கூட தான் இருப்பீங்க, கண்டிப்பா நீங்க தான் எனக்கு மகனா வந்து பொறக்கணும்னு அந்த கடவுள வேண்டிக்கிறேன் மாமா' என்று பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் வைத்த கோரிக்கை :

புகழின் இந்த பழசை மறக்காத பண்பை பலரும் பாராட்டி வந்தாலும் ஒரு சிலர் வடிவேல் பாலாஜியின் குடும்பத்திற்கு உதவி செய்யுமாறு பதிவிட்டு வருகின்றனர். அதற்கு முக்கிய காரணமே வடிவேல் பாலாஜி மனைவி பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்படுவதாகவும் சாப்பாட்டிற்கே திண்டாடுவதாகவும் வடிவேல் பாலாஜியின் மனைவி மேலும் குடும்பத்தை நடத்துவதற்காக வெளியில் வேலை தேடிக் கொண்டிருப்பதாகவும் அவர்களது அக்கம்பக்கத்தினர் கூறி இருந்தனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full