5 வருட காதலியை மணமுடித்த புகழ். வைரலாகும் திருமண புகைப்படங்கள். அப்போ Sep5னு சொன்னது ?

By Rajkumar · 1/9/2022

குக்கு வித் கோமாளி புகழ் தனது 5 வருட காதலியை மணமுடித்து இருக்கிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்தவர் புகழ். இவர் கடலூரை சேர்ந்தவர். வெறும் ஐநூறு ரூபாயை வைத்துக்கொண்டு சென்னைக்கு வேலை தேடி வந்தார். முதலில் மெக்கானிக் கடையில் வேலை செய்த இவர் தொடர்ந்து பல கடையில் வேலை செய்து இருக்கிறார். பிறகு 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் முதன் முதலாக புகழ் கலந்திருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் பலரையும் மகிழ்வித்து தனெக்கென தனி ரசிகர் பட்டாளம் வைத்து இருப்பவர் புகழ். கடந்த இரண்டு சீசன்களிலும் புகழுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தது. இவர் சபாபதி என்ற படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார்.அதனைத் தொடர்ந்து அஸ்வின் நடிப்பில் வெளிவந்த என்ன சொல்ல போகிறாய், அஜித்தின் வலிமை போன்ற படங்களில் புகழ் நடித்திருந்தார்.

படங்களில் கலக்கும் புகழ் :

இதனைத் தொடர்ந்து புகழ் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இறுதியாகஅருண் விஜயின் யானை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற பல படங்களில் புகழ் நடித்து இருந்தார் புகழ். மேலும், இவர் ஜூ கீப்பர் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் அடிக்கடி விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் புகழ்.

புகழின் காதலி :

இப்படி ஒரு நிலையில் புகழ், பேன்ஸி என்பவரை 5 வருடங்களாக காதலித்து வந்தார். குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இதுகுறித்து பேசிய புகழ், ஐந்து வருடமாக நாங்கள் காதலித்து வருகிறோம். அவரை எனக்கு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு ஆடிஷன் போகும்போது இருந்தே தெரியும். அவர் பெயர் பென்சி. நாங்கள் இந்த வருடம் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறோம். கூடிய விரைவில் எங்கள் கல்யாணத்தைப் பற்றி சொல்கிறோம் என்று கூறி இருந்தார்.

காதலியை கரம் பிடித்த புகழ் :

இதனால் இவர்கள் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் பலரும் எதிர்பாத்து வந்தனர். மேலும், கடந்த சில திங்கங்களுக்கு முன்னர் தனது திருமணம் குறித்த தகவலை உறுதி செய்து இருந்தார் புகழ். இப்படி ஒரு நிலையில் புகழ் மற்றும் பேன்ஸியின் திருமணம் இன்று நடைபெற்று இருக்கிறது. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து புகழுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விரைவில் திருமண ரிசப்ஷன் :

ஏற்கனவே புகழ் தனது திருமண பத்திரிக்கையை வெளியிட்ட போது வரும் செப்டம்பர் 5 ஆம் தேதியை குறிப்பிட்டு இருந்தார். ஆனால், புகழ் திருமணம் இன்று நடைபெற்றதாகவும் 5 ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதனால் தான் இன்று நடந்த திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருக்கமான உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டு இருந்தனர் என்றும் கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full