முன்பு கையில் காயம், தற்போது கார் விபத்து - புலம்பியபடியே குக்கு வித் கோமாளி பிரபலத்துக்கு நடந்த விஷயம்.

By Arun · 20/7/2023

புதிய கார் வாங்கிய 6 மாதத்தில் குக்கு வித் கோமாளி பிரபலம் விபத்தில் சிக்கி இருக்கும் செய்து சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று சீசன்கள் ஒளிபரப்பாகி வெற்றிகராக முடிவடைந்த 'குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். இந்த நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் இருப்பதற்கும் அதுவே காரணம் என்று சொல்லலாம். அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனையில் மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது. இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட், தாமு நடுவர்களாக இருக்கிறார்கள்.

குக் வித் கோமாளி :

ஒவ்வொரு சீசனும் புது புது வித்தியாசத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசன் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டு இருக்கிறது. தற்போது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி மூலம் எத்தனையோ பேர் பிரபலமாகி இருக்கின்றனர். அந்த வகையில் கடந்த சில சீசன்களில் பங்குபெற்ற சக்தியும் ஒருவர்.

View this post on Instagram

A post shared by sakthi (@sakthii___)

சக்தி வாங்கிய கார் :

சக்தி டிக் டாக் செயலியின் மூலம் பிரபலமானார்.பின்னர் இவர் கலந்து கொண்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவரை பிரபலமாக்கியது. மேலும், இவர் தொடர்ந்து இரண்டு சீசன்களில் கலந்து கொண்டார். இப்படி ஒரு நிலையில் இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் புதிய கார் ஒன்றை வாங்கி இருந்தார். அப்போது புகழுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு " ஓம் நமச்சிவாய, என்னுடைய புதிய மயிலு. உங்கள் அனைவரையும் அன்புடனும் ஆதரவுடனும் எனது முதல் காரை வாங்கினேன் மக்களே. புகழ் Ney love you neyyy என்னுடைய எல்லா தொடக்கத்திலும் என் அன்னான் என்று பதிவிட்டு இருந்தார்.

இவ்வளவு இளம் வயதில் சக்தி கார் வாங்கியதை தொடர்ந்து பலரும் பாராட்டி இருந்தனர். இப்படி ஒரு நிலையில் சக்தி கார் விபத்தில் சிக்கி இருக்கிறார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் லைவில் பேசிய அவர், சென்னை சென்ட்ரல் அருகில் காரில் சென்று கொண்டிருந்தபோது ஒரு பேருந்து தன்னுடைய காரை உருசியபடி வந்து இடித்துவிட்டது. இதனால் என்னுடைய தலையில் அடிபட்டு விட்டது. இருப்பினும் மருத்துவமனைக்கு செல்லும் அளவிற்கு காயம் ஏற்படவில்லை என்று கூறி இருக்கிறார்.

சக்தியின் இந்த வீடியோவை கண்டு பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வந்த நிலையில் அந்த வீடியோவை சக்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கி விட்டார். சமீபத்தில் தான், சக்தி கையில் அடிபட்டு கட்டுடன் இருக்கும் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், ஹாய் நான் ஒரு சின்ன பிரேக் எடுக்க எடுத்துக்கொள்ளப் போகிறேன். பிசிகல் ஆகவும் சரி, மெண்டல் ஆகவும் சரி கொஞ்சம் மனதிற்கு ஒரு மாதிரியாக இருக்கு.

https://www.youtube.com/watch?v=npXUGRF-qlI&t=456s

நான் இப்போது பழைய சக்தியாக இல்லாத மாதிரியான ஒரு பீல் இருக்கு. மீடியாவில் நிறைய விஷயத்தை நான் புரிந்து கொண்டேன். ஆனால், எல்லாத்தையும் நான் இப்போது சொல்ல முடியாது. கொஞ்ச நாளைக்கு கண்காணாத இடத்துக்கு போயிட்டு வரேன் என்று ரொம்ப எமோஷனலாகபேசி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி இவர் பேசி இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சிஏற்படுத்தியது. அது மட்டும் இல்லாமல் ரசிகர்கள், கஷ்டப்படாதீர்கள், எல்லாம் சரியாகிவிடும். உங்களுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி கை கொடுக்கவில்லையா? என்றெல்லாம் ஆறுதல் கூறி கமெண்ட் போட்டு வந்தனர்.

behindtalkies AMP · Quick view
View full