சுடச்சுட வெளியான குக் வித் கோமாளி 6 போட்டியாளர் லிஸ்ட், இந்த முறை யார் தெரியுமா?

By subhashini · 30/4/2025

குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி இதுவரை ஐந்து சீசன்கள் முடிந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே, இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கியது. நான்கு சீசன்களாக நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் கடந்த முறை நிகழ்ச்சியில் இருந்து விலகி, சன் டிவியில் ஒளிபரப்பான ‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சிக்கு நடுவராக சென்றார். அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக குக் வித் கோமாளி 5 நிகழிச்சியில் களம் இறங்கி இருந்தார்.

கடந்த முறை நிகழ்ச்சியை ரக்ஷன் மற்றும் மணிமேகலை தொகுத்து வழங்கி இருந்தார்கள். சினிமா, சீரியலை விட இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானோர் தான் அதிகமாக இருக்கிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியின் நான்கு சீசன்களையும் மீடியா மேஷன்ஸ் என்ற நிறுவனம் தான் தயாரித்திருந்தது. ஆனால், கடந்த ஆண்டு இவர்கள் விஜய் டிவியில் இருந்து வெளியேறி இருப்பதாக அறிவித்திருந்தார்கள். அதோட ஐந்தாவது சீசனையும் தயாரிக்கும் பொறுப்பிலிருந்தும் வெளியேறிட்டார்கள். அதனால் தான் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் விலகி விட்டார்.

குக் வித் கோமாளி:

கடந்த சீசன் தான் பல சர்ச்சைக்குரிய நிகழ்ச்சியாக இருந்தது. காரணம், பல பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த சீசனில் ஆரம்பத்திலிருந்து மணிமேகலை -பிரியங்கா இடையே சலசலப்பு ஏற்பட்டு இருந்திருந்தது. நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை தொடங்கும் நிலையில் இருவருக்கும் இடையே இருந்த பிரச்சனை பூகம்பமாக வெடித்து நிகழ்ச்சியை விட்டே மணிமேகலை வெளியேறி விட்டார். அதே போல் டைட்டில் பட்டதை பிரியங்கா தான் பெற்றிருந்தார். இதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் வருமா? என்று ரசிகர்கள் மத்தியில் குழப்பம் நிலவிக் கொண்டிருந்தது.

குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சி:

பின் குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்பட்டது. பின் இந்த முறை சர்ப்ரைஸ் ஆக பிக் பாஸ் 8 போட்டியாளர் சௌந்தர்யா என்ட்ரி கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதை அடுத்து நிகழ்ச்சி தொடர்பாக ப்ரோமோக்கள் வெளியாகி இருந்தது. அதில் இந்த முறை இரண்டு நடுவர்கள் உடன் மூன்றாவது நடுவரை அறிமுகப்படுத்தி இருந்தார்கள். அவர் வேறு யாரும் இல்லை செஃப் கௌஷிக். மேலும், இந்த நிகழ்ச்சி மே நான்காம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

நிகழ்ச்சி குறித்த அப்டேட்:

இது தொடர்பாக விஜய் டிவியில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர்கள் குறித்த விவரம் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் தொடரின் நாயகி மதுமிதா கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

நிகழ்ச்சி போட்டியாளர்:

அதுமட்டுமில்லாமல் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமும் இருக்கிறது. இவரை அடுத்து நடிகை ப்ரீத்தி கலந்து கொள்ள இருக்கிறார். இவர் நடிகர் சஞ்சீவின் மனைவி ஆவார். இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியலில் வில்லி ரோலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர்களை அடுத்து இந்த நிகழ்ச்சியில் புது வரவாக சௌந்தர்யா, இன்ஸ்டா பிரபலம் சர்ஜின் குமார், பாடகர் பூவையார், டோலி ஆகியோர் கோமாளிகளாக களம் இறங்கி இருக்கிறார்கள். கூடிய விரைவிலேயே நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த முழு அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full