திருமண நாளில் தன்னுடைய திருமண புகைப்படத்தை பதிவிட்ட ஸ்ருதிகா - எப்படி இருந்துள்ளார் பாருங்க.

By Rajkumar · 28/1/2023

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை ஸ்ருத்திகா. இவர் பிரபல பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனுவாசனின் பேத்தியும் ஆவார். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடித்த “ஸ்ரீ” படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமா உலகில் அறிமுகனார். ஆனால், முதல் படமே படு தோல்வியடைந்தது. அதன் பின்னர் இவர் ஆல்பம், தித்துக்குதே, நள தமயந்தி போன்ற பல படங்களில் நடித்திருந்தார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளத்திலும் சில படங்களில் நடித்திருக்கிறார்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி:

அதோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது என்று சொல்லலாம். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசனுக்கும் எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது.

ஆனால், இவர் நடித்த எந்த படமும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடைய வில்லை. அதனால் ஸ்ருத்திகா சினிமாவில் இருந்து நடிப்பதை நிறுத்தி விட்டார். நடிகை ஸ்ருதிக்கு, ஆதித்யா சிவ்பிங்க் என்ற சகோதரரும் இருக்கிறார். இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் கல்லூரி மாணவனாக நடித்து இருந்தார்.இருந்தாலும் ஸ்ருத்திகாவால் சினிமா துறையில் சாதிக்க முடியவில்லை.

ஸ்ருத்திகா திரை பயணம்:

இவர் சினிமாவில் இருந்து விலகி அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மகன் ஒருவர் இருக்கிறார். தற்போது ஸ்ருத்திகா குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி:

அதோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது என்று சொல்லலாம். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசனுக்கும் எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பங்கேற்று ஸ்ருதிகா முதல் பரிசையும் வென்றார்.

திருமண நாள் :

இப்படி ஒரு நிலையில் நேற்று தனது திருமண நாளை கொண்டாடிய ஸ்ருதிகா, தனது திருமணத்தின் போது எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டு 'இத்தனை வருடங்களில் என்னுள் சிறந்ததை மட்டும் வெளிக் கொண்டு வந்தவருக்கு…என்னைப் போலவே என்னை நேசித்து, வணங்கி, நான் செய்யும் எல்லாவற்றிலும் எனக்கு நம்பிக்கை தருகிறார். எனது முதுகெலும்பு, ஆதரவு மற்றும் வலிமையின் உண்மையான தூண்.இந்த நாளில் கடவுள் எனக்கு இந்த மனிதனை ஆசீர்வதித்தார், அவர் கொடுத்த ஒவ்வொரு வாக்குறுதியையும் உண்மையாக வாழ்கிறார். ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். எங்களுக்கு திருமண நாள் வாழ்த்துக்கள்' என்று உருக்கமுடன் பதிவிவிட்டுள்ளார்.

'

behindtalkies AMP · Quick view
View full