விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் படை உள்ளது. இதுவரை தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகளிலேயே இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பி -யில் முதலிடத்தில் உள்ளது. இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக உள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சி மூன்று வருடங்களாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கி உள்ளது. மேலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார் சுனிதா. இவர் விஜய் டிவிக்கு ஒன்றும் புதிதானவர் இல்லை.

விஜய் டிவியில் ஒளிபரப்பான டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்டார் சுனிதா. நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் இருந்த காலத்திலிருந்தே சுனிதாவும் இருக்கிறார். மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நடன நிகழ்ச்சிகளாக “ஜோடி, பாய்ஸ் vs கேர்ள்ஸ் ” போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கு பெற்றவர் சுனிதா. டான்ஸ்ஸின் மூலம் தமிழகத்தில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கினார் சுனிதா. பின் கொஞ்சம் கொஞ்சமாக தன்னையும் மெருகேற்றி, தன்னுடைய மொழியையும் மெருகேற்றி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். முடிந்தவரை எல்லா இடங்களிலும் தமிழில் பேச முயற்சி செய்தார்.

Advertisement

சுனிதாவின் சின்னத்திரைப் பயணம்:

டான்ஸில் மட்டுமின்றி காமெடியிலும் சுனிதா பிரபலமானவராக திகழ்ந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் நாளுக்கு நாள் சுனிதாவிற்கு ஃபேன் பேஸ் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அதற்கு காரணம் அவருடைய உழைப்பும், விடா முயற்சி, தொழில் பக்தி என்று தான் சொல்லணும். தற்போது இவர் விஜய் டிவியில் மூன்று வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக திகழ்ந்து வருகிறார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது.

சோசியல் மீடியாவில் சுனிதா:

இது ஒரு பக்கம் இருக்க, சுனிதா எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருப்பார். இவரை இன்ஸ்டாவில் எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் இவர் தனியாக யுடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் நடனம், சமையல், காமெடி என்று ஏதாவது ஒரு வீடியோவை பகிர்ந்து கொண்டே வருகிறார். இந்தநிலையில் சுனிதா, வாங் என்பவரை காதலிப்பதாக சமீபத்தில் சோசியல் மீடியாவில் கிசுகிசுக்கப்பட்டது. டான்ஸர் வாங் வேற யாரும் இல்லைங்க, ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் சுனிதாவுடன் டான்ஸ் ஆடி இருந்தவர்.

Advertisement

சுனிதா காதலிக்கும் நபர்:

இவர்களுடைய ஜோடி நடுவர்கள் மத்தியில் பாராட்டு மழையில் நனைந்து என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இருவரும் நடனமாடி இருந்தார்கள். தற்போது இவர்கள் இருவரும் தான் காதலிப்பதாக சோசியல் மீடியாவில் உலா வந்திருந்தது. ஆனால், சுனிதா இது குறித்து எந்த விளக்கமும் தரவில்லை. இந்த நிலையில் தன்னுடைய யூடியூப் சேனலில் சுனிதா ரசிகர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி இருந்தார். அதில் வாங் சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்திருந்தார்.

Advertisement

வாங் செய்த பிராங்க்:

பின் கையில் ரோஜாப் பூவுடன் எல்லோர் முன்னிலையிலும் சுனிதாவுக்கு வாங் லவ் ப்ரொபோஸ் செய்தார். சுனிதா கையில் மோதிரம் போட்டு விட்டார். ஆனால், வாங் எப்போதுமே நல்ல நண்பன் மட்டுமே என்று சுனிதா பதில் கொடுத்து விட்டார். கடைசியில் தான் வாங் பண்ணது பிராங்க் என்பது தெரிந்தது. இருந்தாலும் இந்த சம்பவம் மூலம் நீண்டநாள் பரவி வந்த வதந்திக்கு பதில் கிடைத்துவிட்டது. இதனால் சுனிதா ரசிகர்கள் எல்லோருமே ஹாப்பி அண்ணாச்சி.

Advertisement