குக்கு வித் கோமாளி சுனிதாவா இது ? நீச்சல் குளத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பாருங்க.

By Arun · 24/11/2021

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்த சிலர் சினிமாவிலும் தற்போது ஜொலித்து வருகிறார் சந்தானம் தொடங்கி சிவகார்த்திகேயன் வரை அனைவருமே விஜய் டிவி பிரபலங்கள் தான் அந்த வகையில். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நடன நிகழ்ச்சிகளாக "ஜோடி, பாய்ஸ் vs கேர்ள்ஸ் " போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கு பெற்றவர் சுனிதா.

அசாம் மாநிலத்தை சேர்ந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான "ஜோடி" நடன நிகழ்ச்சியில் தொடர்ந்து 3 முறைபோட்டியாளராக பங்குபெற்று வந்தார். மேலும் ஒரு சில சீரியல்களில் நடித்து வரும் இவர் தனுஷ் நடித்த "3" படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தோழியாகவும் நடித்திருந்தார். அதன் பின்னர் ஒரு சில திரைப்படங்கள் மற்றும் சீரியல்களிலும் நடித்து வந்தார்.

இதையும் பாருங்க : மனைவியை பிரிந்தாலும் மாறாத மகளின் பாசம் - மகளுடன் ராமராஜன் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் (அப்படியே நளினி Xerox)

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கூட இவர் குடி போதையில் கார் ஒட்டி சென்று விபத்தை ஏற்படுத்தியதாக கூட சர்ச்சை எழுந்தது. ஆனால், அந்த விபத்திற்கு தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறி இருந்தார் சுனிதா. இடையில் சின்னத்திரை பக்கம் காணாமல் போன இவருக்கு குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

இதை தொடர்ந்து சமீபத்தில் ஒளிபரப்பான 'காமெடி ராஜா கலக்கல் ராணி' நிகழ்ச்சியில் கூட பங்கேற்று முதல் இடத்தையும் பிடித்தார். ஜோடி நிகழ்ச்சியில் பல கவர்ச்சியான நடனமாடியுள்ள இவர், சமூக வலைத்தளத்திலும் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் எடுத்த புகைபடங்களை பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full