சென்னை பீனிக்ஸ் மாலில் தனது மகளுக்கு நடந்த சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்டு எச்சரித்த வெங்கடேஷ் பட்.

By subhashini · 2/10/2023

சென்னை பீனிக்ஸ் மாலில் தனது மகளுக்கு நடந்த சம்பவம் குறித்து வெங்கடேஷ் பட் பதிவிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் வெங்கடேஷ் பட் . விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக வெங்கடேஷ் பட் மற்றும் தாமு உள்ளார்கள். அதிலும் வெங்கடேஷ் பட் இந்தியா முழுக்க இருக்கும் பல்வேறு ஹோட்டல்களில் சிறப்பு செஃப்பாக இருந்து வருகிறார்.

இவர் அசைவம் சாப்பிடுவது இல்லை என்றாலும் வெறும் வாசனையை வைத்தே அதில் இருக்கும் உப்பு முதல் கொண்டு சொல்லிவிடுவார். அந்த அளவிற்கு மிகவும் திறமையான ஒரு செஃப்பாக தான் இவரை சொல்ல வேண்டும். குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன்பாகவே இவர் பல சமையல் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றிருக்கிறார். ஆனால், அந்த நிகழ்ச்சியில் மிகவும் கறாரான ஒரு நடுவராக இருந்த இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அப்படியே மாறி மிகவும் ஜாலியான ஒரு நடுவராக மாறி வந்தார்.

வெங்கடேஷ் பட் குறித்த தகவல்:

சமையல் நிகழ்ச்சியை விட இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் ரசிகர்களை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறது. மேலும், இவர் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் கூட சமையல் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் சென்னை பீனிக்ஸ் மாலில் தனது மகளுக்கு நடந்த சம்பவம் குறித்து வெங்கடேஷ் பட் பதிவிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியா வைரலாகி வருகிறது. அதாவது, மால்களில் நகரும் படிக்கட்டுகள் இருப்பது அனைவரும் அறிந்ததே.

View this post on Instagram

A post shared by Venkatesh Bhat S (@chefvenkateshbhat)

எஸ்கலேட்டர் பற்றிய விவரம்;

இதை எஸ்கலேட்டர் என்று சொல்வார்கள். மக்களை ஒரு தளத்தில் இருந்து இன்னொரு தளத்திற்கு கொண்டு செல்லும் நகரும் படிக்கட்டு. இதில் எந்த அளவிற்கு நன்மை இருக்கிறதோ அதே அளவிற்கு தீமைகளும் இருக்கிறது. சில சமயங்களில் இந்த எஸ்கலேட்டர் விபத்துகளை ஏற்படுத்தி இருக்கிறது. வேகமாக சென்று விபத்தை ஏற்படுத்தும், பாதியிலேயே நின்று விடும், கட்டுப்பாடு இல்லாமல் செல்லும், எஸ்கலேட்டர் இடுக்குகளில் கால்கள் மாட்டிக்கொண்ட சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கிறது.

வெங்கடேஷ் பட் மகளுக்கு நடந்த சம்பவம்:

இந்த நிலையில் சென்னை பீனிக்ஸ் மாலில் தன்னுடைய மகளுக்கு எஸ்கலேட்டரலால் நடந்த சம்பவம் குறித்த வீடியோவை தான் வெங்கடேஷ் பட் சோசியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர், என்னுடைய மகளுடன் நான் பீனிக்ஸ் மாலில் எஸ்கலேட்டரில் சென்று கொண்டிருந்தேன். அப்போது என் மகளின் செருப்பு எக்ஸ்ரேட்டரில் மாட்டி இருக்கிறது. அப்படியே அவருடைய கால் உள்ளே இழுத்து சென்றது. உடனே நான் ஷூவை கழற்றி விட்டேன். என் மகளின் ஷூ பயங்கரமாக சேதம் அடைந்திருக்கிறது. இது வேளச்சேரி மாலில் நடந்தது.

https://www.youtube.com/shorts/5cq_9hpDljA

வெங்கடேஷ் பட் சொன்ன அறிவுரை:

இங்கே வரும்போது மக்கள் கவனமாக இருங்கள். குழந்தைகளோடு வருபவர்கள் அதிக கவனமாக இருங்கள். நான் கவனமாக பிடித்து இழுக்கவில்லை என்றால் என்னுடைய மகளுக்கு ஏதாவது ஒரு விபரீதம் நடந்திருக்கும். இது ரொம்ப சீரியஸான விஷயம். இப்படி எல்லாம் நடக்கக்கூடாது. செருப்பின் பாதி உள்ளே சென்று விட்டது. இதைப் பற்றி நான் மால் நிர்வாகத்திடம் புகார் கொடுத்திருக்கிறேன். குழந்தைகளை வைத்திருப்பவர்கள் கவனமாக இருங்கள், பாதுகாப்பாக செல்லுங்கள் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full