சமீப காலமாக சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் கூல் சுரேஷ். இவர் தமிழ் சினிமா உலகில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த சாக்லேட் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.அதற்கு பிறகு இவர் பல படங்களில் நெகட்டிவ் ரோலில் நடித்து பிரபலமானார். அதுமட்டுமில்லாமல் இவர் படங்களில் கலர் கலராக ஹேர் ஸ்டைலும், காஸ்ட்யூம் போட்டு கலக்கி இருக்கிறார். இவர் சினிமாவில் வில்லனாக தான் அறிமுகமானார்.

பின் காமெடியனாக மாறி நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இவர் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் பிறகு நாட்கள் செல்லச் செல்ல இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.தற்போது இவர் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் சிம்புவின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் தெரிந்த ஒன்று. எந்த படமானாலும் சரி, எந்த நிகழ்ச்சி என்றாலும் சரி இவர் வெந்து தணிந்தது காடு என்று தொடங்கி தன்னுடைய கருத்தை சொல்லிக் கொண்டிருந்தார்.

Advertisement

வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீஸுக்கும் முந்தைய நாள் நடிகர் சிம்பு உட்பட பட குழுவினர் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடி இருந்தார்கள்.அப்போது கூல் சுரேஷ்க்கு மனதார நன்றி தெரிவித்து இருந்தார் சிம்பு. அதற்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்து கூல் சுரேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அது மட்டும் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூல் சுரேஷிற்கு பரிசு கொடுத்தது மட்டுமில்லாமல் அவரின் குழந்தைகளின் படிப்பு செலவையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

அதுமட்டும் இல்லாமல் திரையில் எந்த நடிகரின் படம் வெளியானாலும் முதல் நாள் முதல் காட்சி சென்று பார்த்துவிட்டு ரீவியூஸ் கொடுப்பதுதான் இவருடைய வழக்கம். அந்த வகையில் இன்று வெளியான ‘நித்தம் ஒரு வானம்’ மற்றும் ‘லவ் டு டே’ ஆகிய இரண்டு படத்தை பார்த்துவிட்டு தன்னுடைய விமர்சனத்தை கொடுத்து இருந்தார். அந்த வகையில் ‘நித்தம் ஒரு வானம்’ படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் கொடுத்து இருந்தார்.

Advertisement

இவர் விமர்சனம் கொடுத்துகொண்டு இருக்கும் போதே ‘லவ் டு ‘ பட இயக்குனர் பிரதீப், தன்னுடைய படத்தை தான் விமர்சனம் செய்கிறார் என்று கூல் சுரேஷ் அருகில் வந்து நின்றார். அப்போது கூல் சுரேஷ், பிரதீப் காதில் ‘வேற படம் பத்தி பேசிட்டு இருக்கேன்’ என்று சொல்லி பல்ப் கொடுத்தார். அதன் பின்னர் இயக்குனர் பிரதீப் ‘சாரி, நான் என் படம்னு வந்துட்டேன்’ என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பினார்.

Advertisement
Advertisement