'இனி வெந்து தணிந்தது காடு இல்லை' ரூட்டை மாற்றிய நடிகர் கூல் சுரேஷ் - அவரே வெளியிட்ட வீடியோ.

By subhashini · 19/10/2022

இனி வெந்து தணிந்தது காடு இல்லை பத்து தல படத்தின் வசனம் தான் என்று கூல் சுரேஷ் வெளியீட்டு உள்ள வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சமீப காலமாக சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் கூல் சுரேஷ். இவர் தமிழ் சினிமா உலகில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த சாக்லேட் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

அதற்கு பிறகு இவர் பல படங்களில் நெகட்டிவ் ரோலில் நடித்து பிரபலமானார். அதுமட்டுமில்லாமல் இவர் படங்களில் கலர் கலராக ஹேர் ஸ்டைலும், காஸ்ட்யூம் போட்டு கலக்கி இருக்கிறார். இவர் சினிமாவில் வில்லனாக தான் அறிமுகமானார். பின் காமெடியனாக மாறி நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இவர் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் பிறகு நாட்கள் செல்லச் செல்ல இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

கூல் சுரேஷ் திரைப்பயணம்:

தற்போது இவர் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் சிம்புவின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் தெரிந்த ஒன்று. எந்த படமானாலும் சரி, எந்த நிகழ்ச்சி என்றாலும் சரி இவர் வெந்து தணிந்தது காடு என்று தொடங்கி தன்னுடைய கருத்தை சொல்லிக் கொண்டிருந்தார். வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீஸுக்கும் முந்தைய நாள் நடிகர் சிம்பு உட்பட பட குழுவினர் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடி இருந்தார்கள்.

கூல் சுரேஷ் குறித்த தகவல்:

அப்போது கூல் சுரேஷ்க்கு மனதார நன்றி தெரிவித்து இருந்தார் சிம்பு. அதற்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்து கூல் சுரேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அது மட்டும் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூல் சுரேஷிற்கு பரிசு கொடுத்தது மட்டுமில்லாமல் அவரின் குழந்தைகளின் படிப்பு செலவையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் திரையில் எந்த நடிகரின் படம் வெளியானாலும் முதல் நாள் முதல் காட்சி சென்று பார்த்துவிட்டு ரீவியூஸ் கொடுப்பதுதான் இவருடைய வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் வெளியான மணிரத்தினனின் பொன்னியின் செல்வன் படத்திற்கு குதிரையில் வந்திருந்தார்.

கூல் சுரேஷ் வெளியிட்ட வீடியோ:

இப்படி வித்தியாசமான செயல்களை செய்வதன் மூலம் பலருடைய கவனத்தையும் கூல் சுரேஷ் பெற்று இருக்கிறார். இந்த நிலையில் வெந்து தணிந்தது காடு என்ற டயலாக்கை இனி பேச மாட்டேன் என்று கூல் சுரேஷ் வெளியிட்டு இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. வீடியோவில், இனிமேல் வெந்து தணிந்தது காடு என்ற டயலாக்கை கூற மாட்டேன். அதற்கு பதிலாக சிம்பு நடிப்பில் அடுத்ததாக வர இருக்கும் பத்து தல படத்தை வைத்து வேறு டயலாக்கை யோசித்து வைத்திருக்கிறேன்.

https://twitter.com/iamcoolsuresh/status/1582600410480926722

வைரலாகும் வீடியோ

இனிமேல் அதைதான் எல்லா இடத்திலும் பயன்படுத்த இருக்கிறேன். அது என்ன டயலாக்? என்பதை கூடிய விரைவில் தெரிவிக்கிறேன். சிம்புவின் தீவிர ரசிகராக விரும்பி தான் இதை செய்கிறேன். வாய்ப்புக்காக இதையெல்லாம் செய்யவில்லை என்றும் வீடியோவில் கூறியிருக்கிறார். இவர் அடுத்து என்ன டயலாக் சொல்ல இருக்கிறார் என்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full