கேபிஒய் பாலா ஒன்னும் ராஜபரம்பரை, ஜமீன்தார் வீட்டு பையன் இல்லை - கூல் சுரேஷின் அதிரடி பேச்சு

By subhashini · 16/9/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. அதற்காக இவர் இரவு பகலாக தன்னை தானே தயார் செய்தார். அந்த வகையில் இவருக்கு திருப்புமுனையாக இருந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் KPY பாலா செய்த காமெடிகளுக்கு அளவே கிடையாது. இதன் மூலம் தான் இவருக்கு படங்களில் வாய்ப்பு கிடைத்தது. தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்தும், பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், விஜே வாகவும் பணியாற்றி வருகிறார்.

மேலும், பாலா அவர்கள் நடிகர் மட்டுமில்லாமல், சமூக சேவை செய்பவரும் ஆவார். இவர் தான் சம்பாதித்த பணத்தின் மூலம் தன் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற பெரியோர்களின் மருத்துவ செலவிற்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். பின் இவர் மலைவாழ் பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து தந்து இருந்தார். அதே போல கடந்த ஆண்டு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து இருந்தார். இதனால் பாலாவை குட்டி ராகவா லாரன்ஸ் என்று சொல்கிறார்கள்.

சமூக சேவை செய்யும் பாலா:

மேலும், ராகவா லாரன்ஸ் நடத்தி வரும் மாற்றம் அறக்கட்டளையில் பாலா இணைந்து சேவை செய்து கொண்டு வருகிறார். தற்போது ஷெரிப் இயக்கத்தில் பாலா நடித்திருக்கும் படம் காந்தி கண்ணாடி.
இந்த படத்திற்கு விவேக்- மெர்வின் இசையமைத்து இருக்கிறார்கள். சில தினங்களுக்கு முன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. ஆனால், இந்த படத்தின் வெளியீட்டுக்கு பல தடைகளை சந்தித்ததாக நடிகர் பாலா கூறி இருந்தார்.

கூல் சுரேஷ் பேட்டி:

இப்படி இருக்கும் நிலையில் கேபிஒய் பாலாவை விமர்சித்து நடிகர் கூல் சுரேஷ் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. பேட்டியில் கேபிஒய் கூல் சுரேஷ், தம்பி பாலா தான் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் வைத்து மக்களுக்காக உதவி செய்கிறார். ஆம்புலன்ஸ் வாங்கி தருவது, வீடு கட்டி தருவது, கஷ்டப்படும் மக்களுக்கு எல்லாம் தேடி போய் செய்கிறான். நல்ல விஷயம் தான். இந்த பாலா பையன் இலவச மருத்துவமனை கட்டும் அளவுக்கு அவ்வளவு பணம் அவனுக்கு எங்கிருந்து வருகிறது. யார் கொடுக்கிறார்கள்? அவன் ஒன்னும் ராஜ பரம்பரை, ஜமீன்தார் வீட்டு பையனும் கிடையாது.

https://www.youtube.com/watch?v=wPPkCnQfFBI

பாலா பற்றிய விமர்சனம்:

அவ்வளவு பணத்திற்கு அவனுக்கு பின்னால் யாரோ இருக்கிறாங்க, அதை பற்றி விசாரணை செய்யணும் என்று கூறி இருக்கிறார். இப்படி பேசியிருந்ததை பார்த்த பலருமே கூல் சுரேஷை திட்டியும் விமர்சித்தும் வருகிறார்கள். இதற்கு முன்பு அளித்த பேட்டியில் பாலா, நான் யாரிடமும் உதவி கேட்டு அதை மற்றவர்களுக்கு செய்யவில்லை. எனக்கு யாரும் உதவி செய்யவில்லை. என்னிடம் இருப்பதை நான் சம்பாதித்து வைத்து தான் உதவி செய்கிறேன் என்று கூறியிருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full