நடிகர் தனுஷ் தன்னுடைய மகன் என்றும், தங்கள் குடும்பத்திற்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் எனவும், மேலூர் நீதிமன்றத்தில் கதிரேசன் தம்பதியினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, நடிகர் தனுஷ் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. 

தொடக்கத்தில் பெரிதாக பேசப்படாத இந்த வழக்கு நீதிபதி நடிகர் தனுஷ் மேலூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டப் பிறகு பரபரப்பானது. இதயடுத்து தனுஷ் அடிக்கடி நீதி மன்றத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறார்.

Advertisement

கடைசியாக நடந்த விசாரணையின் முடிவில் கதிரேசன் தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அப்போது நீதிமன்றத்தில் தனுஷ், கதிரேசனின் மகன் அல்ல என்பதற்கான, பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், தனுஷ் தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், போலியானவை என, கதிரேசன் தம்பதியினர் மதுரை புதூர் காவல் நிலையத்தில் புகார்  அளித்தனர்.

மனுவை  விசாரித்த நீதிபதி சாமுண்டீஸ்வரிபிரபா, இதுகுறித்து நடிகர் தனுஷ் மற்றும் மதுரை மாநகர் கோ.புதூர் காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். வழக்கு விசாரணை வரும் 13.ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement